
ரன் மிஷின்
இந்த நிலையில் விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காமல் தவித்து வருகிறார்.தற்போது அவருடைய பேட்டிங்கும் முன்பு போல் இல்லை. ரன் மிஷின் என்று அழைக்கப்பட்ட விராட் கோலி, தற்போது கோளாறான மிஷினாக செயல்படுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கூட 11 மற்றும் 20 ரண்களை அடித்த கோலி டி20 போட்டியில் 1 மற்றும் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

போர் கொடி
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி இடம்பெறவில்லை. விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் போர் கொடி தூக்கியுள்ளனர். விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது பார்மை மீட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.விராட் கோலி விரைவில் ரன் அடிக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலியும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

16 ரன்களில் அவுட்
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கினார்.முதலில் பொறுப்பாக விளையாடிய கோலி 3 பவுண்டரிகளை அடித்தார். இதனால் அவர் பார்முக்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஆப் சைடுக்கு சென்ற பந்தை விடாமல் அடித்து விக்கெட் கீப்பிரடிம் கேட்ச் ஆனார். இதனால் 25 பந்துகள் எதிர்கொண்ட விராட் கோலி 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பாபர் அசாம் ஆதரவு
விராட் கோலி பேட்டிங்கில் ரன் அடித்தாலும் ஏதாவது ஒரு தவறு செய்து ஆட்டம் இழந்து வருகிறார்.விராட் கோலி அந்த தவறை சரி செய்தாலே அவர் பழையபடி ரன் குவிக்க முடியும் .இந்த நிலையில் விராட் கோலிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் விராட் கோலிக்கு ஆதரவாக ஒரு ட்வீ ட் போட்டுள்ளார்.அதில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ள அவர் , இதுவும் கடந்து போகும்.. நம்பிக்கையுடன் இருங்கள் என்று விராட் கோலிக்கு ஆதரவான வார்த்தைகளை போட்டுள்ளார். இது விராட் கோலி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











