Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ 6 பால்ல 6 சிக்ஸா.. நான் 26 பால்ல 100 ரன்னு.. பலே பாபர் அசாம்.. இது மேட்ச்!

இஸ்லாமாபாத்: 31 பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செஞ்சுரி அடித்ததே இதுவரை ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட மிக வேகமான செஞ்சுரி ஆகும். இந்த சாதனை கடந்த 2015ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது.

அதேபோல் இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்திற்கு எதிராக 6 பந்துகளில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸ் அடித்தார். தற்போது இந்த இரண்டு சாதனைகளையும் பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் மிஞ்சி இருக்கிறது.

இது ஐசிசி நடத்திய போட்டி இல்லை என்றாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய பல முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள்.

ஷாஹித் அப்ரிடி நிறுவனம்

ஷாஹித் அப்ரிடி நிறுவனம்

ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானில் முக்கியமான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி அதன் மூலம் வரும் வருவாயை சில நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 'எஸ்ஏஎப் ரெட்' மற்றும் 'எஸ்ஏஎப் கிரீன்' என்ற இரு அணிகள் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடின.

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்

இந்த போட்டியில் எஸ்ஏஎப் ரெட் அணியை சேர்ந்த சோயப் மாலிக் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார். பாகிஸ்தானின் முன்னணி வீரரான பாபர் அசாம் ஓவரில் அவர் இந்த சாதனையை செய்தார். இதன் மூலம் எஸ்ஏஎப் ரெட் அணி 10 ஓவரில் 210 ரன்கள் என்று இமாலய ரன்னை எடுத்தது.

பழி வாங்கினார்

211 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய எஸ்ஏஎப் கிரீன் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. ஆறு சிக்ஸ் கொடுத்த கோபத்தில் இருந்த அசாம் 26 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 11 சிக்ஸ்களும், 7 பவுண்டரிகளும் இதில் அடக்கம். இவரின் அதிரடியான ஆட்டத்தால் எஸ்ஏஎப் கிரீன் அணி அபாரமாக வென்றது.

அடுத்த கோஹ்லியா

அடுத்த கோஹ்லியா

பார்ப்பதற்கு கோஹ்லி போலவே இருக்கும் இவர் விளையாடுவதும் கோஹ்லி போலத்தான் இருக்கும். இதனால் இவரை பலரும் கோஹ்லி என்ற அழைத்து வருகின்றனர். அதற்கு இவர் ''நான் கோஹ்லி இல்லை, அவர் மிகவும் சிறந்த வீரர். கிரிக்கெட் உலகில் இப்போது அவர் நம்பர் ஒன் வீரர்'' என்று குறிப்பிட்டார்.

Story first published: Monday, December 25, 2017, 10:58 [IST]
Other articles published on Dec 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+