Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜசிசி புதிய தரவரிசை வெளியீடு.. கோலி, பும்ராவுக்கு பின்னடைவை.. முதலிடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்!

மும்பை: ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார்.

Recommended Video

India -வின் 2nd Round ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.. Virat Kohli சொன்ன முக்கிய தகவல்

கொரோனா காரணமாக சற்று குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்போது அதிகளவில் நடைபெற தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன் தரவரிசை

பேட்ஸ்மேன் தரவரிசை

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தார். இது அவரின் புள்ளிகள் உயர காரணமாய் அமைந்துள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய பேட்ஸ்மேன்கள்

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த விராட் கோலி 857 புள்ளிகளும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணி துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா (825) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் 10 இடங்களுக்குள் வரவில்லை.

 பந்துவீச்சு

பந்துவீச்சு

பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் மெகிடி ஹசன் 713 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், கிறிஸ் வோக்ஸ் 711 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 690 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு சரிந்துள்ளார். மற்ற எந்த இந்திய பௌலரும் முதல் 10 இடங்களில் இல்லை.

 அடுத்த போட்டிகள்

அடுத்த போட்டிகள்

இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து வருவதால் ஒருநாள் போட்டி தொடர்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்திய வீரர்கள் ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து சரிவை காண்பார்கள் என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, July 14, 2021, 21:44 [IST]
Other articles published on Jul 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+