Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த பாபர் அசாம்.. ஹசிம் அம்லா ரெக்கார்ட் முறியடிப்பு.. சராசரியிலும் புதிய உச்சம்

ரொட்டர்டாம்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Recommended Video

India அணியின் Top Order பற்றி Ricky Ponting கருத்து *Cricket

ரொட்டர்டாம் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரர் இமாம் உல் ஹக், 19 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஃபக்கர் சமான் 109

ஃபக்கர் சமான் 109

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஃபக்கர் சமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஃபக்கர் சமான், சதம் விளாசினார். ஃபக்கர் சமான் 109 ரன்களில் வெளியேறினார்.

317 ரன்கள் இலக்கு

317 ரன்கள் இலக்கு

முகமது ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, குஸ்தில் ஷா 21 ரன்களில் வெளியேறினார். இறுதியில் சதாப் கான் 48 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்சில் பாபர் அசாம் 3 சாதனைகளை படைத்துள்ளார்.

கடைசி 8 இன்னிங்ஸ்

கடைசி 8 இன்னிங்ஸ்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 8 இன்னிங்சில் பாபர் அசாம், 7 முறை அரைசதம் கடந்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். 158,57,114,105,103,77,1, 74 என 8 இன்னிங்சில் பாபர் அசாம் அடித்த ஸ்கோராகும். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் சராசரி 60 ஆகும்.

உலக சாதனை

உலக சாதனை

இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 88 இன்னிங்சில் பாபர் அசாம், 4481 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு 88 இன்னிங்சில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 4473 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

Story first published: Tuesday, August 16, 2022, 20:22 [IST]
Other articles published on Aug 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+