Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாம்-க்கு ஆங்கிலம் சரியாக தெரியாது.. கொஞ்சம் கூட பேட்டிங்கை மாற்றுவது இல்லை.. கிப்ஸ் கருத்து

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்க்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்சல் கிப்ஸ் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் முதல் ஐசிசி தொடர் நடைபெற இருக்கிறது.

இதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி கோப்பையை இழந்தது.

cricket Babar azam Gibbs PSL champions trophy

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அஸாம் தொடக்க வீரராக களம் இறங்கி இருந்தார். பாபர் அசாம், கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு தான் சதம் அடித்தார். அதன் பிறகு இதுவரை ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை. இந்த நிலையில் psl தொடரில் கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் விளையாடி வருகிறார்.

இந்த அணியின் பயிற்சியாளராக கிப்ஸ் செயல்படுகிறார்.இந்த நிலையில் பாபர் அசாமிடம் பேசி சிலவற்றை புரிய வைப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், பாபர் அசாம்க்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. இது ஒரு பிரச்சினையாகவே இருக்கின்றது. எனவே என்னால் ஆங்கிலத்தில் நான் சொல்ல நினைப்பதை அவரிடம் சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் பாபர் அசாம், முதல் முறை எவ்வாறு பார்த்தேனோ, அதேபோல் தான் தற்போதும் விளையாடி வருகின்றார். இதனால் பாபர் அசாமுடைய ஆட்டத்தை நான் வெறும் கண்காணிக்க மட்டும் தான் செய்கின்றேன். சில விஷயங்களை சொன்னாலும், பாபர் அசாம் அதனை மாற்றிக் கொள்வது கிடையாது. தொடர்ந்து ஒரே மாதிரி தான் அவர் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வருகிறார் என்று கிப்ஸ் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி வரும் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 15, 2025, 20:18 [IST]
Other articles published on Feb 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+