Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வடை போச்சே.. விராட் கோலியின் முக்கிய சாதனையை முறியடிக்க தவறிய பாபர் அசாம்.. எனினும் ஒரு நல்ல விஷயம்!

லாகூர்: விராட் கோலியின் பிரமாண்ட சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.

Recommended Video

PakVsEng தொடரில் Babar Azam உருவாக்கிய புதிய சாதனை இதுதான்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

அந்தவகையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 6 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. நேற்று நடைபெற்ற 6வது டி20ல் பாகிஸ்தான் 169 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

பாபர் அசாம் ரெக்கார்ட்

பாபர் அசாம் ரெக்கார்ட்

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்ற போதும், அதன் கேப்டன் பாபர் அசாம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். பாகிஸ்தானின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பிய போதும், அவர் தூண் போல நிலைத்து நின்று ஆடினார். 59 பந்துகளை சந்தித்த பாபர் 87 ரன்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தார்.

சமன் செய்த பாபர்

சமன் செய்த பாபர்

டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்களின் பட்டியலில் கோலியை முந்தி முதலிடம் பிடிக்கவிருந்தார். எனினும் அது நடக்கவில்லை.

81 இன்னிங்ஸ்களில் 3000 டி20 ரன்களை கடந்தார். 79 இன்னிங்ஸ்களிலேயே இதனை தகர்க்க பாபருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் 2 போட்டிகளில் சொதப்பியதால் தனது 81வது இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து கோலியுடன் சமன் செய்தார். 100 இன்னிங்ஸ்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்கள் இவர்கள் இருவர் மட்டுமே ஆகும்.

அதிக ரன்கள் அடித்தவர்கள்

அதிக ரன்கள் அடித்தவர்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இந்த பட்டியலில் ரோகித் சர்மா 131 இன்னிங்ஸ்களில் 3,694 ரன்களை அடித்துள்ளார். இவருக்கு பின்னர் விராட் கோலி 3,660 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Saturday, October 1, 2022, 12:10 [IST]
Other articles published on Oct 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+