Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டிலேயே பாபர் அசாம் மோசமான சாதனை.. தயவு செய்து ஆஸ்திரேலியா பக்கம் திரும்ப வந்துராதீங்க

சிட்னி: பிக் பேஷ் லீக் (பிபிஎல்) வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். 29 வயதான பாபர் அசாம், பாகிஸ்தான் அணிக்காக விளையாட பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரின் பிளேஆப் சுற்றுக்கு முன்னதாகவே சிட்னி சிக்சர்ஸ் அணியில் இருந்து வெளியேறியதாக, அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியது. ச

அண்மையில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் டி20ஐ தொடரில் பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்படாததால், அவர் முழு பிபிஎல் தொடரிலும் விளையாடுவார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வரவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கான அணியின் தயாரிப்புகள் தொடங்கியதால், அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவை விட்டுப் புறப்படுமாறு அழைக்கப்பட்டார்.

இவ்வளவு முக்கியமான நேரத்தில் ஒரு நட்சத்திர வீரரை இழந்தது எந்த ஒரு அணிக்கும் பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு, இந்த விலகல் உண்மையில் ஒரு நல்ல விசயமாக பார்க்கப்படுகிறது.

பாபர் அசாமின் பிபிஎல் சீசன் முற்றிலும் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்தது. 11 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே சேர்த்த அவர், சராசரியாக 22.44 ரன்கள் மற்றும் 103.06 ஸ்ட்ரைக் ரேட்டில் செயல்பட்டார்.

ஒரு பிபிஎல் சீசனில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த எந்தவொரு பேட்ஸ்மேனை விடவும், அவரின் 103.06 ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவானதாகும். இதன் மூலம், பிபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் சாதனையை அவர் படைத்துள்ளார்.

பிபிஎல் தொடரில் 200+ ரன்கள் அடித்த வீரர்களில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் பட்டியல்:

  • 103.06 - பாபர் அசாம் (சிட்னி சிக்சர்ஸ், பிபிஎல் 15)
  • 105.21 - நாதன் மெக்ஸ்வீனி (பிரிஸ்பேன் ஹீட், பிபிஎல் 13)
  • 106.04 - ஜொனாதன் வெல்ஸ் (அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிபிஎல் 10)
  • 106.25 - அலெக்ஸ் ரோஸ் (பிரிஸ்பேன் ஹீட், பிபிஎல் 6)
  • 107.03 - ஜேக் வெதரால்ட் (அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிபிஎல் 11)

இது குறித்து பேசிய பாபர், "சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு, அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி. இத்தனை நாட்கள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, நான் இப்போது தேசிய கடமைக்காக அணியை விட்டு வெளியேற வேண்டும்.

“இந்த நேரத்தில் நிறைய மகிழ்ச்சியான, பாசிட்டிவான நினைவுகளை நான் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன். சிட்னி சிக்சர்ஸ் ரசிகர்களுக்கு குறிப்பாக நன்றி. அவர்களின் ஆதரவும், உற்சாகமும், மகிழ்ச்சியும் எப்பொழுதும் இருந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நான் அந்த உணர்வை மிகவும் அனுபவித்தேன், மிக்க நன்றி" என்று கூறினார்.

பாகிஸ்தான் அணிக்கான அழைப்பு எதிர்பாராத நேரத்தில் வந்தாலும், கடமையின் முக்கியத்துவத்தை கிளப் புரிந்துகொள்வதாக சிக்சர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அவரின் மோசமான ஆட்டத்தால் பாபரை அணியில் இருந்து நீக்குமாறு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது.சமீபத்தில், ஒரு போட்டியில் சக வீரர் ஸ்டீவ் ஸ்மித் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தபோது, பாபர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். கோபமடைந்த பாபர், பவுண்டரி கயிற்றைத் தாக்கி, பல மணிநேரம் அணியினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.

இப்படி சில நாட்கள் நடக்கும் என்று சிக்சர்ஸ் கேப்டன் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் தெரிவித்தார். "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான தவறான புரிதல் என்று நினைக்கிறேன். இது எங்கள் கலாச்சாரத்தில் சாதாரணமாக நடப்பது. அவருக்கு (பாபர்) இது பழக்கம் இல்லாததால், புரியாமல் போனது. விளக்கிய பிறகு அவர் சரியாக இருந்தார். இருவரும் இணக்கமாகிவிட்டனர், இரண்டு நட்சத்திரங்களும் மீண்டும் நண்பர்களாகிவிட்டனர்" என்று ஹென்ரிக்ஸ் கூறினார்.சேலஞ்சர் போட்டிக்கான சிக்சர்ஸ் அணியில் அனுபவமிக்க பேட்ஸ்மேன் டேனியல் ஹியூக்ஸ் பாபர் அசாமிற்கு பதிலாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, January 23, 2026, 12:14 [IST]
Other articles published on Jan 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+