Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த சிறப்பு திட்டம்.. பாபர் அசாம் கொடுத்த எச்சரிக்கை..எல்லாத்துக்கும் தயார்

மெல்போர்ன் : இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளானை தீட்டி உள்ளதாக பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது.

இந்த நிலையில் போட்டி குறித்து செய்தியாளிடம் பேசிய பாபர் அசாம், இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

சிறப்பு பிளான்

சிறப்பு பிளான்

இது குறித்து பேசிய அவர், இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்துவதற்காக சிறப்பு பிளான்களை அமைத்துள்ளோம்.அதை சரியாக நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன். எங்கள் அணியில் ஷான் மசூத் காயத்திலிருந்து குணமடைந்து உள்ளார். உடல் தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார்.

எதற்கும் தயார்

எதற்கும் தயார்

மெல்போர்ன் ஆடுகளம் இரண்டு நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. எங்கள் பிளேயிங் லெவன் குறித்து நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். மழை பெய்து ஆட்டம் குறைக்கப்பட்டாலும் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ரசிகர்களுக்காக முழு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். இயற்கை எப்படி இருக்கும் என்பது குறித்து நமது கையில் இல்லை.

சாதகம்

சாதகம்

ஷாகின்ஷா அப்ரிடி காயத்தில் இருந்து நன்று குணம் அடைந்து விட்டார். அவர் பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளார். இதேபோன்று ஹாரிஸ் ரவுப் பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் அணிக்காக தான் விளையாடினார் .அது நிச்சயம் எங்கள் அணிக்கு சாதகமாக அமையும்.இந்திய அணி வீரர்களுடன் நாங்கள் நல்ல நட்பு உணர்வோடு இருக்கிறோம். தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அப்படிதான் இருப்பார்கள்.

எது வேண்டுமானாலும் நடக்கலாம்?

எது வேண்டுமானாலும் நடக்கலாம்?

களத்தில் எங்கள் அணி வீரர்கள் 100% திறனை வெளிப்படுத்துவார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மொத்தம் இரண்டு பேர் தான் என இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு டி20 குறுகிய கால விளையாட்டு தான். போட்டி நாள் அன்று எங்களுடைய பேட்டிங்கை நீங்கள் பார்ப்பீர்கள்.அன்று எது வேணாலும் நடக்கலாம் என்று பாபர் அசாம் கூறினார்.

Story first published: Sunday, October 23, 2022, 12:41 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+