Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா நடக்குது இங்க.. அடில் ரஷித் விரித்த வலை.. எலி போல சிக்கிய பாபர்.. என்ன ஆனதுனே புரியல!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு பக்காவாக ப்ளான் போட்டு அடில் ரஷித் விக்கெட் எடுத்த விதம் பாராட்டை பெற்று வருகிறது

இரு அணிகளும் மோதும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்த போதும், கடைசி வரை அந்த அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை.

தொடக்க வீரர்கள் ஏமாற்றம்

தொடக்க வீரர்கள் ஏமாற்றம்

தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஆனால் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் சாம் கரனின் வலையில் சிக்கி 15 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் முழு பொறுப்பும் கேப்டன் பாபர் அசாமின் மீது திரும்பியது. அதற்கேற்றார் போலவே பாபரும் மெல்பேர்ன் மைதானம் மிகப்பெரியது என உணர்ந்து சிங்கிள் மற்றும் டபுள்களாக அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

நிதானமான இன்னிங்ஸ்

நிதானமான இன்னிங்ஸ்

பாபர் அசாமை விட்டுவைத்தால் மிகவும் டேஞ்சர் என்பதை உணர்ந்த கேப்டன் பட்லர், தொடர்ச்சியாக அவருக்கு எதிராக அடில் ரஷித்தை கொண்டு வந்தார். அப்போது ரஷித் ஒரே மாதிரியான பந்துகளையே தொடர்ச்சியாக வீசி, பாபர் அசாமை ஒரே மனநிலையுடன் கொண்டு வந்து, பக்காவாக விக்கெட் எடுத்தார்.

பாபர் அசாமுக்கான திட்டம்

பாபர் அசாமுக்கான திட்டம்

அடில் ரஷித் தனது முதல் 2 ஓவர்களிலும் பாபர் அசாமுக்கு லெக் சைடில் அடிப்பது போன்றே பந்துகளை போட்டு தந்தார். சரியாக உடலுக்கு போட்டு பாபரும் ஸ்கொயர் திசையில் தொடர்ச்சியாக அடித்து வந்தார். ரன்களும் சில கசிந்தது தான். ஆனால் 3வது ஓவரின் முதல் பந்தில் தான் தனது வியூகத்தை பயன்படுத்தினார் அடில் ரஷித்.

3வது ஓவரில் ஸ்கெட்ச்

3வது ஓவரில் ஸ்கெட்ச்

முதல் பந்திலும் உடலுக்கு தான் பந்து வீசினார், எனினும் அது கூக்ளியாக போடப்பட்டது ஆகும். வழக்கம் போன்ற பந்து தான் என ஏமாந்த பாபர் அசாம், அதனை மிட் ஆன் திசையில் சிங்கிள் அடிக்க தட்டினார். பந்து கூக்ளி என்பதால் உடனடியாக டேர்ன் ஆகி நேராக பவுலரிடமே கேட்ச்-ஆக சென்றது. இதனால் 32 ரன்களுக்கெல்லாம் பாபர் அசாம் பெவிலியன் திரும்பினார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

பாபர் அசாம் 30 ரன்களை கடந்து ஸ்ட்ரைக்கை உயர்த்த சென்ற சூழலில் ஜாஸ் பட்லர் அட்டகாசமாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த விக்கெட்டால் தான் பாகிஸ்தானின் இன்னிங்ஸில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டு ஸ்கோர் குறைந்தது என்றே கூறலாம்.

Story first published: Sunday, November 13, 2022, 15:18 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+