Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ஃபேப் 4 இல்லை.. ஸ்டார் வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்.. சர்ச்சையில் சிக்கிய ஸ்டார்!

மும்பை: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் பிரோமோ வீடியோவில் ஃபேப் 5 பேட்ஸ்மேன்கள் என்று பெயரிட்டு விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.

"Fab Four" சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 4 பேட்ஸ்மேன்களை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் சொல் தான் அது. இதனை முதல்முதலாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் க்ரோ பயன்படுத்தினர். அதற்கு பின் தொன்று தொட்டு இந்த வார்த்தை ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமகாலத்தில் Fab Four வீரர்கள் என்று விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

Babar Azam includes in the Star Sports promo on Fab 5 Best Batsman in the world for World Cup 2023

ஆனால் அண்மை காலமாக பாகிஸ்தான் அணியின் கேப்டனும் இளம் வீரருமான பாபர் அசாம் Fab Four வீரர்களுக்கு கடுமையான சவால் அளித்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 28 அரைசதங்கள் என்று 59.01 பேட்டிங் சராசரியில் 5,370 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 49 போட்டிகளில் விளையாடி 3,772 ரன்களை விளாசியுள்ளார். இதனால் ஃபேப் 4 பட்டியலில் பாபர் அசாமையும் இணைக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான பிரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் Fab Four என்ற வார்த்தைக்கு பதிலாக Fab Five என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருடன் பாபர் அசாமும் இணைந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பெரியளவில் வெற்றியை கண்டிராத பாபர் அசாமை எப்படி Fab Five பட்டியலில் இணைக்க ஐசிசி-க்கு மனது வந்தது என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் சம காலத்தில் பாபர் அசாமை விடவும் ரோகித் சர்மா, டேவிட் வார்னர், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்டோர் நீண்ட ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக மாற்றப்படாத Fab Four பெயர், பாபர் அசாமிற்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஃபேப் 5 பட்டியலில் இணைந்த பாபர் அசாமிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரோமோ பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Friday, September 8, 2023, 18:14 [IST]
Other articles published on Sep 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+