Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் சர்மாவால் கூட முடியவில்லை.. ஆசிய அளவில் பாபர் அசாம் முதலிடம்! புதிய மைல்கல் படைக்கிறார்

கராச்சி : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், இந்திய வீரர்கள் விராட் கோலி ரோஹித் சர்மாவையும் முந்தி ஒரு புதிய மைல் கல்லை தொட இருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்ற வருகிறது.

இதில் முதல் இரண்டு முறையும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவி இருக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

babar azam cricket babar azam

ரோஹித் சர்மா 2552 ரன்களும், விராட் கோலி 2235 ரன்களும் அடித்து இருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் இவர்கள் இருவரையும் முந்தி 2661 ரன்களுடன் ஆசிய கிரிக்கெட்டிலே அதிக ரன்கள் அடித்த வீரர் என்று பெருமையை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பாபர் அசாம், வெறும் 339 ரன்கள் அடித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3000 ரன்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த பட்டியலில் தற்போது ஜோ ரூட் முதலிடத்திலும் மார்னஸ் லாபஸ்சேன் இரண்டாவது இடத்திலும், ஸ்மித் மூன்றாவது இடத்திலும், ஸ்டோக்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் ஐந்தாவது வீரராக பாபர் அசாம் இருக்கின்றார். தற்போது பாகிஸ்தான அணி, வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறது.

உலகக்கோப்பை டி20 உலக கோப்பை போன்ற தொடர்களில் தோல்வியை தழுவியுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாபர் அசாம் 339 ரன்கள் அடித்தால் 3000 ரன்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற மைல் கல்லை தொடுவார்.

அதேசமயம், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் இனிவரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். இதில் இருவரும் சிறப்பாக விளையாடினால் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை தொட்டு விடுவார்கள். இதனால் ரோகித் சர்மா முதலில் தொட போகிறாரா பாபர் அசாம் தொட போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, August 18, 2024, 16:00 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+