ரோகித், கோலி ஓய்வு.. இனி பாபர் அசாம்க்கு செம லக் தான்.. மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு
மும்பை : சர்வதேச t20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு மாபெரும் சாதனை படைக்க இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பெரிய அளவில் விளையாடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெல்வதற்காக இருவரும் கடைசியாக ஒருமுறை களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். விராட் கோலி இறுதி போட்டியில் அதிக ரன்கள் சேர்த்து பட்டையை கிளப்பினார்.

தற்போது இருவரும் ஓய்வு பெற்றாலும் மாபெரும் சாதனைகளை படைத்து தான் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக ரோஹித் சர்மா 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 5 சதம், 32 அரை சதம் அடங்கும். இதன் மூலம் சர்வதேச t20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.
இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவர் 125 போட்டியில் விளையாடி 4188 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், 38 அரை சதம் அடங்கும். தற்போது இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் தான் இருக்கிறார். இவர் 123 போட்டிகள் விளையாடி 4145 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 36 அரை சதம் அடங்கும்.
தற்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் முதல் இடத்தைப் பிடிக்க பாபர் அசாம்க்கு சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. விராட் கோலியை முந்த பாபர் அசாம்க்கு வெறும் 43 ரன்கள் தான் தேவைப்படுகிறது. இதேபோன்று ரோகித் சர்மாவின் முதல் இடத்தை பிடிக்க பாபர அசாம்க்கு 86 ரன்கள் தான் தேவைப்படுகிறது.
இதனால் பாபர் அசாம் இன்னும் சில நாட்களிலே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறப்போகிறார். இதில் என்ன அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பாபர அசாம்க்கு பிறகு அடுத்த இடத்தில் இருக்கும் வீரர் யார் என்று கேட்டால் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் தான். இவர் தற்போது 3601 ரன்கள் அடித்திருக்கிறார்.
இவருக்கும் பாபர் அசாம்க்கும் கிட்டத்தட்ட 500 ரன்களுக்கு மேல் வித்தியாசம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பால் ஸ்ட்ரில்லிங் பெரும் அளவில் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் மார்ட்டின் குப்தில் தான் இருக்கிறார். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
அதேபோன்று முகமது ரிஸ்மான் ஆறாவது இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் 3313 ரன்கள் தான் அடித்திருக்கிறார். 3277 ரன்கள் அடித்திருக்கும் டேவிட் வார்னரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதனால் பாபர் அசாம் முதலிடம் பிடித்தால் அவரை முறியடிக்க அருகில் எந்த வீரரும் இல்லை. பாபர் அசாம்க்கு போட்டி போடும் வகையில் தற்போதுள்ள கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்கள் என்றால் அது சூரிய குமார் தான்.அவர் 20 வது இடத்தில் இருக்கிறார்.
சூர்யா அடித்திருக்கும் ரன்கள் 2,340 ஆகும் .இதே போன்று கே எல் ராகுல் 22-வது இடத்தில் இருக்கிறார். அவர் 2265 ரன்கள் அடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நாலாயிரம் ரன்களை தொடர் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்குள் பாபர் அசாம் ஐந்தாயிரம் ரன்களை தாண்ட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாபர் அசாம் முதலிடத்தை பிடித்தால் அவரை பின்னுக்கு தள்ள இன்னும் பல காலம் ஆகலாம்.


Click it and Unblock the Notifications