Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல் சாதனையை செய்த மூத்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்.. 12000 ரன்கள்

கராச்சி: ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12000 ரன்களை கடந்த 2வது பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சரித்திரத்தை பாபர் அசாம் படைத்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பெஷாவர் சால்மி அணிக்காக பாபர் அசாம் விளையாடி வருகிறார். கராச்சி தேசிய மைதானத்தில் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் களமிறங்கினார். இந்த போட்டியில் 13 ரன்கள் எடுத்தால் 12000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டலாம் என்ற நிலையில் அவர் பேட்டிங் செய்ய வந்தார்.

பெஷாவர் அணியின் இன்னிங்சில் 4வது ஓவரை கராச்சி பந்துவீச்சாளர் குஷ்தில் ஷா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை இமாலய சிக்சருக்கு பறக்கவிட்ட பாபர் அசாம், தனது 12000வது ரன்னை பதிவு செய்து புதிய சாதனையை தன்வசப்படுத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக வலம் வரும் 31 வயதான பாபர் அசாம், இதுவரை மொத்தம் 351 டி20 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது ஒட்டுமொத்த டி20 ரன்களில் 11 சதங்கள் மற்றும் 98 அரைசதங்கள் அடங்கும்.

Babar Azam Makes T20 History Pakistan Star Completes 12 000 Runs in Karachi Kings PSL Clash

பாகிஸ்தான் வீரர்களில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூத்த வீரர் சோயப் மாலிக் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 557 போட்டிகளில் விளையாடி 13,571 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது பாபர் அசாம் 12,074 ரன்களுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 306 போட்டிகளில் 8918 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 463 போட்டிகளில் 14,562 ரன்களுடன் உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார். கெயிலுக்கு அடுத்தபடியாக கீரன் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

Story first published: Friday, April 10, 2026, 8:11 [IST]
Other articles published on Apr 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+