Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை மட்டும் செய்யலனா, பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாம் ஓரங்கட்டப்படுவார்! சோயிப் அக்தர் வார்னிங்

மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஓரங்கட்ட பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் சோயிப் அக்தர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் பாபர் அசாம் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பாபர் அசாம் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரில் மொத்தம் 80 ரன்கள் அடித்த பாபர் அசாம் மூன்று டி20 போட்டிகளில் மொத்தமாகவே 47 ரன்கள் தான் அடித்து இருந்தார். இந்த நிலையில் பாபரசம் குறித்து பேசிய சோயிப் அக்தர், பாகிஸ்தான் அணியின் ஸ்டார் வீரராக பாபர் அசாம் இருக்கிறார்.

pak vs zim babar azam champions trophy 2025 india vs pakistan

நிச்சயம் பாபர் அசாம்க்கு என்னுடைய ஆதரவு இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி தற்போது புதிய நிர்வாகத்துக்கு கீழ் சென்று இருக்கிறது. அவர்கள் புதியதாக தான் யோசிப்பார்கள். புதிய நிர்வாகத்திடம் பாபர் அசாம் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும். இல்லையென்றால் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் பாபர் அசாம்க்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். அந்த தொடரில் பாபர் அசாம் குறைந்தபட்சம் மூன்று சதங்கள் அடித்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற வைத்தால் பாபர் அசாம் தப்பிக்கலாம். இல்லையென்றால் பாபர் அசாம் எதிர்காலம் மிகவும் கடினமாக மாறிவிடும் என்று சோயிப் அக்தர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

2023 ஆம் ஆண்டிலிருந்து பாபர் அசாமின் டெஸ்ட் சராசரி வெறும் 20.7 என்ற அளவில் தான் இருக்கிறது. பாபர் அசாம், கடைசியாக டிசம்பர் 23ஆம் தேதி அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். அதன் பிறகு அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக கராச்சியில் டிசம்பர் 22ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 161 ரன்கள் குவித்திருந்தார்.

அதன் பின்பு பாபர் அசாம், சதம் அடிக்கவில்லை. இந்த நிலையில் பாபர் அசாம் குறித்து ஏற்கனவே பேசி இருந்த ரிக்கி பாண்டிங் விராட் கோலியை போல் பாபர் அசாம் பிரேக் எடுத்துக்கொண்டு கிரிக்கெட்டில் மீண்டும் சாதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி தற்போது ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் பிறகு வரும் பத்தாம் தேதியிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Story first published: Tuesday, December 3, 2024, 15:10 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+