Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PSL 2026: பாபர் அசாம் அதிரடி சதம்.. 59 பந்துகளில் 103 ரன்கள் விளாசல்.. கேப்டனாக உலக சாதனை

கராச்சி: பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம், கராச்சியில் நடந்த 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் குவாலிபையர் சுற்று ஆட்டத்தில் வரலாற்றுச் சாதனை ஒன்டிற நிகழ்த்தியுள்ளார். பெஷாவர் சல்மி அணிக்காக கள0மறங்கும் பாபர் அசாம், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராக 59 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், கேப்டனாக அதிக சதம் அடித்த ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் (8 சதங்கள்) சாதனையை முறியடித்து பாபர் அசாம் உலக சாதனை படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வந்தார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் ஸ்டரைக் ரேட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் டி20 உலககோப்பை தொடரில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில் மீண்டும் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் பாபர் அசாம், பிஎஸ்எல் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். இந்த சீசனில் மட்டும் அவர் 2வது சதம் அடித்துள்ளார்.

கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் தனது எட்டு சதங்களை 216 போட்டிகளில் எட்டிய நிலையில், பாபர் அசாம் அதே சாதனையை எட்ட வெறும் 154 போட்டிகளையே எடுத்துக்கொண்டார். இந்த ஆண்டில் பாபர் அசாமின் ஃபார்ம் மிகச் சிறப்பாக உள்ளது; பத்து போட்டிகளில் 84 சராசரியுடன் 588 ரன்களையும், 146.26 ஸ்ட்ரைக் ரேட்டையும் இந்த சீசனில் பதிவு செய்தார். அவரது இந்த ஆட்டம், பாகிஸ்தான் டி20 அணிக்குத் திரும்ப வர வழியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் அணிக்கு எதிரான இந்த சதத்தில், தொடக்க வீரராகக் களமிறங்கிய பாபர் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி, 174.57 ஸ்ட்ரைக் ரேட்டை வெளிப்படுத்தினார். இது அவரது நான்காவது பிஎஸ்எல் சதம். பாகிஸ்தானில் இது எட்டாவது டி20 சதமாகும், இதன் மூலம் ஒரே நாட்டில் அதிக டி20 சதங்கள் அடித்த அபிஷேக் ஷர்மா (இந்தியா, 8) மற்றும் விராட் கோலி (இந்தியா, 8) ஆகியோரின் உலக சாதனையை அவர் சமன் செய்தார்.

Story first published: Tuesday, April 28, 2026, 23:58 [IST]
Other articles published on Apr 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+