Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் கூறிய கருத்து.. உடனடியாக பதில் தந்த பாக். கேப்டன் பாபர் அசாம்.. மாற்றம் ஏற்படுமா??

மும்பை: இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதில் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசனில் ரசிகர்கள் அனைவருக்கும் வியக்கும் அளவிற்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தார் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்.

6வது, 7வது வீரராக களமிறங்கிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கை

தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கை

ஐபிஎல் தொடரின் போது தினேஷ் கார்த்திக் ஒரு சுவாரஸ்ய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், உலகின் தலைசிறந்த நம்பர். 1 வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வருவார். அதுவும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் நம்.1 ஆகலாம். பாபர் தற்போது சிறப்பான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் அடிக்கிறார். அது ஒரு ஸ்பெஷல் திறமை.

அதிக டெஸ்ட் போட்டிகள்

அதிக டெஸ்ட் போட்டிகள்

பாகிஸ்தானுக்கு வரும்நாட்களில் நிறைய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதிலும் இதே போன்ற ஃபார்மில் ரன்களை குவித்தால் நிச்சயம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் உலகின் நம்.1 வீரர் என்ற பெருமையை பாபர் பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறினார்.

பாபர் அசாமின் பதில்

பாபர் அசாமின் பதில்

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கருத்து குறித்து பாபர் அசாம் பதில் அளித்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக நம்.1 ஆக வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். கடின உழைப்பால் 1 அல்லது 2 வடிவ கிரிக்கெட்டில் நம்.1 ஆக இருக்கலாம். ஆனால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஃபிட்னஸை பெரிதும் பார்க்க வேண்டும். கூடுதல் ஃபிடனஸுடன் இருக்க வேண்டும்.

 அதிக நம்பிக்கை

அதிக நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதற்காக கூடுதலாக தயாராகி வருகிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக இருந்துவிட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது எனக்கூறினார்.

ஐசிசி பட்டியல்

ஐசிசி பட்டியல்

தற்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக பாபர் அசாம் தான் இருந்து வருகிறார். விராட் கோலி 2வது இடத்தில் இருந்து வருகிறார். டெஸ்டை பொறுத்தவரையில் பாபர் அசாம் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 2, 2022, 20:28 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+