Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியிடம் நிறைய கற்று கொண்டுள்ளேன்.. பல அறிவுரை வழங்கி இருக்கிறார்.. பாபர் அசாம் நெகிழ்ச்சி

லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், தற்போது பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டன் ஆகவும் தடுமாறி வருகிறார். 29 வயதான பாபர் அசாம், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 5729 ரன்கள் அடித்திருக்கிறார். மேலும் சையது அன்வருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் பாபர் அசாம்க்கு இருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பாபர் அசாம் நான்காயிரம் ரன்களை நெருங்கி இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார். தற்போது உள்ள கிரிக்கெட் உலகத்தில் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவராக கருதப்படுகிறார்.

cricket babar azam virat kohli

ஆனால் சமீப காலமாக பாபர் அசாம் திணறி வருவது அவருடைய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2023 ஆசிய கோப்பை மற்றும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போன்ற தொடர்களில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது.

இதனால் பல்வேறு விமர்சனங்களை பாபர் அசாம் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் இடம் பாபர் அசாம் நேர்காணல் செய்தார். அதில் பேசிய பாபர் அசாம், நான் விராட் கோலி, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய வீரர்களிடம் அதிக அளவு பேச வேண்டும். நான் அவர்களிடம் பல அறிவுரைகளை கேட்டு இருக்கின்றேன்.

இதில் அனைவருமே கிரிக்கெட் தொடர்பான பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பாபர் அசாம் கூறினார். இதேபோன்று தமது குடும்பம் குறித்து பேசிய பாபர் அசாம், நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றேன்.எங்களிடம் எப்போதும் பணம் இருந்தது கிடையாது. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

வளரும் பருவத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடினால் கிரிக்கெட் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கிரிக்கெட் பந்துகளை விளையாடும் போது மிகவும் கடினமாக இருந்தது என்று பாபர் அசாம் கூறினார். டி20 உலக கோப்பைக்கு பிறகு தற்போது ஓய்வில் இருக்கும் பாபர் அசாம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 21, 2024, 22:57 [IST]
Other articles published on Jul 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+