Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாமின் பலவீனம் இதுதான்.. இனி பாக். ஓப்பனிங்கை ஈசியா பிரிக்கலாம்.. இந்திய அணிக்கு ஜாக்பாட்!

பிரிஸ்பேர்ன்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சமீபத்தில் செய்த ஒரு விஷயத்தால் அவரின் பலவீனம் என்னவென்பது தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று மதியம் மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இந்த போட்டிக்காக தான் இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்தில் உள்ளது. பந்துவீச்சிலும் பும்ரா இல்லை என்ற கவலை இருந்த போது முகமது ஷமி அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் மட்டுமே நம்பிக்கையாக உள்ளனர். ஆனால் இவர்களை வீழ்த்துவது சாதாரணம் அல்ல.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

சமீபத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் ஓப்பனிங்கில் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் காரணம். இருவரில் யாரையேனும் ஒருவரை வீழ்த்திவிட்டால் கூட அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் பார்த்துக்கொள்ளலாம். இந்நிலையில் இந்திய அணி அதற்கு புதிய யுக்தியை கண்டறிந்துள்ளது.

பலவீனம் என்ன

பலவீனம் என்ன

அதாவது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு ஷார்ட் பால்கள் தான் பலவீனம் எனத் தெரியவந்துள்ளது. மற்ற லைன்களில் வீசும் பந்துகளை அசால்ட்டாக எதிர்கொள்ளும் பாபர் அசாம், ஷார்ட் பால்களை மட்டும் விட்டுவிடுகிறார், இல்லையெனில் அடித்து அவுட்டாகிவிடுகிறார். ஆஸ்திரேலிய களம் பவுன்ஸருக்கு சாதகமான ஒன்று. எனவே இங்கு ஷார்ட் பால்களை தான் அதிகம் எதிர்பார்க்கலாம் என்பதால் அவருக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

இதனையடுத்து அவருக்கு ஷார்ட் பால்-க்கு என்றே ஸ்பெஷல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக சாஹீன் அஃப்ரிடி உள்ளிட்ட பவுலர்கள் பாபருக்கு எதிராக ஷார்ட் பால்களாக போட்டுள்ளனர். அவற்றினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் மேத்யூவ் ஹெய்டன் ஆலோசனை கூறி வருகிறார். எனினும் அவர் அதனை திறம்பட செய்யாததால், இந்திய வீரர்கள் ஷார்ட் பால்களை ஆயுதமாக எடுக்கலாம்.

Story first published: Tuesday, October 18, 2022, 17:20 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+