
நம்பினேன்
ஒரு சிலர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உடைய மோசமான பேட்டிங்கே இந்த தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டு வருகின்றனர். நன்றாக இருந்த பாகிஸ்தான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கெடுத்து விட்டதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 130 என்ற இலக்கை நாங்கள் நிச்சயமாக எட்டி விடுவோம் தான் என்று நினைத்தோம்.

ஏமாற்றத்தை தருகிறது
ஆனால் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. பேட்டிங்கில் நாங்கள் சரிவர விளையாட வில்லை. எங்கள் அணியில் நல்ல பேட்ஸ்மேன் இருக்கின்றனர் .ஆனால் பவர்பிளேவில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டம் இழந்து வருவது ஏமாற்றத்தை தருகிறது. சதாப் கான் மற்றும் சான் மசூத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தனர்.

நெருக்கடி
ஆனால் துரதிஷ்டவசமாக சதாப் கான் ஆட்டமிழந்த உடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் பறி கொடுத்ததால் நெருக்கடி எங்கள் அணிக்கு ஏற்பட்டது. முதல் ஆறு ஓவரில் நாங்கள் புதிய பந்தை வைத்து சரியாகப் பந்து வீசவில்லை. ஆனால் இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து ஜிம்பாப்வே குறைந்த ரன்களில் சுருட்டினோம் .

மீண்டு வருவோம்
தற்போது இந்த தோல்வி குறித்து ஒரு அணியாக அமர்ந்து எங்களுடைய தவறுகளை குறித்து ஆலோசனை செய்வோம். அடுத்த போட்டிக்காக கடின பயிற்சி மேற்கொண்டு எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதனிடையே, பாகிஸ்தான் எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணி தோல்வி தழுவினால் மட்டுமே அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான அணி நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications