Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட பாவமே.. இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? வினையாக முடிந்த விளையாட்டு..பாபர் அசாம்க்கு நடுவர் வைத்த ஆப்பு

முல்தான்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாட்டாக செய்த காரியம், ஒட்டுமொத்த அணிக்கே வினையாக வந்து முடிந்தது.

முல்தானில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை எட்டியது.

Babar azam silly mistake cost Penalty for Pakistan

இதில் கேப்டன் பாபர் அசாம், அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்திருந்தார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது ஒரு காமெடி சம்பவம் நிகழ்ந்தது. 28வது ஓவரில் பாகிஸ்தான் வீரத் நவாஸ் பந்துவீசும் போது, அதனை ஹூசைன் ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். அப்போது அதனை பிடிக்க ஓடிய விக்கெட் கீப்பர் ரிஸ்வான், தனது கை உறையை கழற்றி கீழே போட்டு விட்டு ஓடி, பந்தை எடுத்தார்.

அப்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்த கையுறை சும்மா தானே கிடக்கிறது என்று, அதனை கையில் எடுத்து போட்டு கொண்ட பந்தை பிடித்தார். இதனையடுத்து, இந்த விதிமீறல்களுக்கு எதிரானது என்று அறிவித்த நடுவர், வெஸ்ட் இண்டீஸ்க்கு 5 ரன்களை வழங்கினர்.

இதனை கண்ட ரசிகர்கள், இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா சொல்லவே இல்ல என்று யோசித்து வருகின்றனர். வேலியி போன ஓனானை வேட்டியில் விட்டு கொண்ட கதை போல் ஆயிடுச்சே என பாபர் அசாம் ஃபில் பண்ண, மற்ற வீரர்கள் நகைச்சுவையாக சிரித்தனர். விக்கெட் கீப்பரை தவிர வேறு யாரும் பந்தை பிடிக்க கையுறையை அணிய கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 11, 2022, 20:56 [IST]
Other articles published on Jun 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+