Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி-பாபர் அசாம்.. இருவரில் யார் சிறந்த வீரர்..மேத்யூ ஹைடன் பதில் இதுதான்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செமி பைனல் நடந்தது. அசுர பலம்வாய்ந்த பாகிஸ்தான் அணியும், இந்த தொடரில் எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியா அணியும் மோதின.

Recommended Video

Virat Kohli vs Babar Azam இருவரில் யார் சிறந்தவர்கள் - Hyden கொடுத்த பதில்

ஆஸ்திரேலியா பவுலிங் போடுவதாக அறிவிக்க முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வழக்கம்போல் மிகச்சிறப்பாக ஆடியது. பாபர் அசாம்-முகமது ரிஸ்வான் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

முகமது ரிஸ்வான் 67 ரன்கள் எடுக்க, இறுதியில் பக்கர் ஜமான் அதிரடியில் மிரட்ட 20 ஓவர்களில் 176 என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் போராடினாலும் மற்ற வீரர்கள் வரிசையாக நடையை கட்டினார்கள். ஆனாலும் இறுதியில் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தனர். ஷாகின் அப்ரிடி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய மேத்யூ வேட் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான்

சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான்

செமி பைனலில் தோற்றாலும் இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடிய 6 ஆட்டத்தில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியுள்ளார். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் செமையாக செயல்பட்டது. தொடரில் இருந்து வெளியேறினாலும் பாகிஸ்தான் அணியையும், பாபர் அசாமையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

பாபர் அசாம்-விராட் கோலி

பாபர் அசாம்-விராட் கோலி

இந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விராட் கோலி, பாபர் அசாம் இருவரில் யார் சிறந்தவர்கள்? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த மேத்யூ ஹைடன் கூறியதாவது;- நான் பார்க்கும் விதத்தில் இவர்கள் இருவரும் எதிர்மாறாக இருக்கிறார்கள். 27 வயதான பாபர் அசாம், 33 வயதான கோலியுடன் ஒப்பிடும்போது இளமையாக இருக்கிறார்.

பாபர் சிறப்பானவர்

பாபர் சிறப்பானவர்

பாபர் அணியை வழிநடத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் நிலையானவர். அவர் அதிக ஆடம்பரமானவர் அல்ல. பாபர் பெரும்பாலான நேரங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரது கேப்டன்சியிலும், பேட்டிங்கிலும் உன்னிப்பாக செயல்படுகிறார். அதே நேரத்தில் கோஹ்லி மிகவும் உணர்ச்சிவசப்படுபவர். களத்தில் மிகவும் ஆரவாரமாக இருக்கிறார். பாபர் விராட் கோலியைபோல் இன்னும் சாதிக்கவில்லை. ஆனால் பாபர் ஒரு கேப்டனாக இன்னும் இளமையாக இருக்கிறார், ஆனால் நான் பார்த்ததிலிருந்து அவர் தினமும் கற்றுக்கொள்கிறார். அவர் விரைவாகக் கற்றுக்கொள்பவர். இவ்வாறு மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

Story first published: Friday, November 12, 2021, 15:22 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+