Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் துவங்கிய பயிற்சி... நெட் பயிற்சியில் ஈடுபட்ட ரஹானே... டிவிட்டரில் உற்சாக பதிவு!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை முன்னிட்டு வலை பயிற்சியில் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஈடுபட்டார்.

தான் பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் மீண்டும் பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளதாக கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் அடுத்தடுத்து இரு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் துவக்கம்

நாளை மறுதினம் துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் சென்னையில் துவங்கவுள்ளது. இதன் முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் பகலிரவு போட்டி உள்ளிட்ட இறுதி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

சென்னையில் துவங்கவுள்ள டெஸ்ட் போட்டிகளையொட்டி 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்ட இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தற்போது நெட் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நெட பயிற்சிகளில் ஈடுபட்ட புகைப்படங்களை சில வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இந்நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானேவும் நெட் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 23 செகண்ட் வீடியோவில் அவர் ஆப் ஸ்பின்னர்களின் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

சென்னையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி துவங்கி நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 3, 2021, 16:55 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+