ருத்துராஜ்க்கு தொடரும் சோகம்..! திறமை இருந்தும் அதிர்ஷடம் இல்லை..? ரசிகர்கள் ஏமாற்றம்..!!
அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் களமிறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புகழ் பெற்றவர் ருத்துராஜ் கெய்க்வாட்
Recommended Video
விஜய் ஹசாரே, சையது முஸ்தாக் கோப்பை தொடரிலும் களமிறங்கி கலக்கியவர் ருத்துராஜ் கெய்க்வாட். இந்தியாவின் அடுத்த நட்சத்திரம் என்று பலரும் ருத்துராஜை போற்றினர்.
முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் தீலிப் வெங்சர்கார், ருத்துராஜ்க்கு உடனடியாக வாய்ப்பை வழங்கி இந்திய அணியில் இடம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏமாற்றம்
விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 4 சதம் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. ஆனால், அனுபவ வீரர் ஷிகர் தவானும் அணியில் இருந்ததால், ருத்துராஜ்க்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பினார்.

மீண்டும் கொரோனா
இதே போன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ருத்துராஜ்க்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் அணியில் இருக்கும் ஷிகர் தவானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ருத்துராஜ்க்கு தான் வாய்ப்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மாற்று வீரராக மாயங் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் வேதனை
ஏற்கனவே கடந்த 2020 ஐ.பி.எல். சீசனின் போது ருத்துராஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் திறமை இருந்தும், வாய்ப்பு கிடைத்தும், ருத்துராஜ்க்கு அதிர்ஷ்டம் இல்லை என்று ரசிகர்கள் வேசதனை தெரிவித்துள்ளனர். எனினும் ருத்துராஜ் தொடர்ந்து முயன்று, இந்த தடையை உடைப்பார் என்று அவர்கள் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாயங் அகர்வால் ஏன்?
இந்த நிலையில் ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட் அணியில் இல்லாத நிலையில் சுப்மான் கில், பிரித்வி ஷா போன்ற வீரருக்கு வாய்ப்பு வழங்காமல் ஏற்கனவே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மாயங் அகர்வாலை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தது, ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் ரிஷப் பண்டை தொடக்க வீரராக களமிறக்குங்கள் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications