இந்திய அணி இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. கம்பீர் சொன்ன அந்த வார்த்தை.. எல்லாம் போச்சு!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா எளிதாக வென்றுவிடும், இங்கிலாந்து அணி வாஷ் அவுட் ஆகிவிடும் என்று முன்னாள் வீரர் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையே இந்த வாரம் நடக்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளும் மோதும் இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடரை போல விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வெல்லும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.

இந்தியா
இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் தற்போது பாஜகவின் சேர்ந்து டெல்லியில் எம்பி ஆகிவிட்டார். இவர் அரசியலில் பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்தாத நிலையில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பாக கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகிறார். ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரின் போது இவர் மிகவும் பிசியாக இருந்தார்.

இங்கிலாந்து
பொதுவாக கம்பீர் கூறும் கருத்துக்கள், கணிப்புகள் பொய்யாகிவிடும் என்று கருத்து நிலவி வருகிறது. கம்பீர் என்ன சொல்கிறாரோ அதற்கு எதிர்மாறாக நடக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஐபிஎல் சமயத்தில் கம்பீர் சொன்ன கருத்துக்கள் எதுவுமே பலிக்கவில்லை. இவர் கணிப்புக்கு எதிர்பதமாகவே எல்லாம் நடந்தது.

மோசமான கருத்து
ஒரு வீரரை கம்பீர் நன்றாக ஆடுகிறார் என்று சொன்னால் அடுத்த போட்டியிலேயே அவர் சொதப்புவார். ஐபிஎல்லில் தொடக்கத்தில் நன்றாக ஆடிய சஞ்சு சாம்சன், தவான் போன்றவர்கள் கம்பீர் பாராட்டிய பின் மோசமாக சொதப்பினார்கள். கிரிக்கெட் உலகில் கம்பீர் இப்படி மோசமான லக் கொண்டவராக பார்க்கப்படுகிறார்.

நடக்காது
இப்படி இருக்கும் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுவிடும். அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றுவிடும் கம்பீர் கூறியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் கண்டிப்பாக இந்தியாதான் வெற்றிபெறும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

நெட்டிசன்கள்
கம்பீர் இப்படி கூறியதை நெட்டிசன்கள் பலரும் கெட்ட சகுனமாக பார்க்க தொடங்கி உள்ளனர். கம்பீர் இந்தியா வென்றுவிடும் என்று கூறியுள்ளார். இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை. அவர் சொன்னால் எப்போதும் அதற்கு எதிராகவே நடக்கும். இந்திய அணி இனிதான் கவனமாக இருக்க வேண்டும்.. என்று பலரும் கிண்டலாக எச்சரித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications