For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி அணி படுதோல்வி.. ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல்.. கடைசி நேரத்தில் இப்படி ஒரு சோதனையா??

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி பரிதாபமான தோல்வியை பெற்றுள்ளது.

Recommended Video

IPL 2022 Punjab Kings-க்கு எதிராக RCB படுதோல்வி | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியான இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஆர்சிபி அணியா

பேர்ஸ்டோ மிரட்டல்

பேர்ஸ்டோ மிரட்டல்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஓப்பனிங்கே அட்டகாசமாக அமைந்தது. தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ ஒவ்வொரு பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் 5 ஓவர்களில் அந்த அணி 60 ரன்களை குவித்துவிட்டது. சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டருகளுடன் 66 ரன்களை சேர்த்தார்.

கடின இலக்கு

கடின இலக்கு

இதன் பின்னர் வந்த வீரர்களில் பனுக்கா ராஜபக்ச (1), கேப்டன் மயங்க் அகர்வால் (19), ஜித்தேஷ் சர்மா (9), ஹர்ப்ரீத் பிரார் (7) ரிஷி தவான் ( 7) என அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் மறுமுணையில் தூண் போன்று நின்ற லியாம் லிவிங்ஸ்டன் எதற்குமே தயங்காமல் ஆர்சிபி பவுலிங்கை பொளந்துக்கட்டினார். மொத்தமாக 42 பந்துகளை சந்தித்த அவர் 70 ரன்களை அடிக்க, பஞ்சாப் அணி 210 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

 கோலி அதிருப்தி

கோலி அதிருப்தி

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர்கள் விராட் கோலி 20 ரன்களுக்கும், கேப்டன் டூப்ளசிஸ் 10 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த ராஜத் பட்டிதர் 26 ரன்கள், மஹிபால் லாம்ரோர் 6 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றம் தந்தனர்.

உடைந்த நம்பிக்கை

உடைந்த நம்பிக்கை

அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான க்ளென் மேக்ஸ்வெல் 35 ரன்கள் வரை அடித்து போராடினார். எனினும் அவராலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் வெறும் 11 ரன்களுக்கு நடையைகட்டியதால் ஆர்சிபியின் மொத்த நம்பிக்கையும் உடைந்தது. இதனால் 20 ஓவர்கள் இறுதியில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியடைந்தது.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை மட்டுமே பெற்று 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள அந்த ஒரு போட்டியில் இனி வெற்றி பெற்றால் மட்டுமே ஆர்சிபி அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற முடியும். இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Story first published: Friday, May 13, 2022, 23:45 [IST]
Other articles published on May 13, 2022
English summary
RCB vs PBKS match ( ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் போட்டி ) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி படுதோல்வியடைந்தது. இதனால் ப்ளே ஆஃப் செல்வது கடினமாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+