Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025.. காலிறுதியில் பிவி சிந்து தோல்வி.. 6வது பதக்கம் பறிபோனது.. கண்ணீர் சிந்திய வருதாணி

பாரீஸ்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டு தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியை தழுவினார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் இரண்டாவது வீராங்கனை ஆன சீனாவைச் சேர்ந்த வாங் ஷியை பிவி சிந்து எளிதில் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்தோனேஷியாவின் குசுமா வர்தாணி என்ற வீராங்கனை பிவி சிந்து எதிர் கொண்டார். தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள வர்தாணி சிந்துவிடம் ஏற்கனவே நான்கு முறை மோதி இருக்கிறார். இதில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியை அவர் தழுவி இருந்தார்.

PV Sindhu

பிவி சிந்து உலகின் இரண்டாவது நிலை வீராங்கனை வீழ்த்தியதால் அரை இறுதிச்சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்று ஆறாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை உறுதி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிந்துக்கு ஆரம்பமே கொஞ்சம் தடுமாற்றத்தை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆறுக்கு ஆறு என்ற கணக்கில் இருந்தனர்.

அப்போது, வருதாணி அபாரமாக செயல்பட்டு 11க்கு 7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஒரு கட்டத்தில் சிந்துவால் ஒரு சின்ன கம்பேக் மட்டும் தான் கொடுக்க முடிந்தது. ஆனால் அவரால் முதல் செட்டை கைப்பற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் செட்டை 21க்கு 13 என்ற கணக்கில் வருதாணி வென்றார். இதனை அடுத்து இரண்டாவது செட் சிந்து தான் ஒரு சாம்பியன் வீராங்கனை என்பதை நிரூபித்தார்.

பல ஷாட்களை வேகமாக அடித்து புள்ளிகளை அடுத்தடுத்து பெற்றால் இரண்டாவது செட்டில் தனது கண்ட்ரோலான ஷாட்கள் மூலம் சிந்து வருதாணிக்கு அதிர்ச்சி அளித்தார். சிந்துவின் இந்த அட்டாக்கிங் ஆட்டம் வருதாணியை நிலை குறைய வைத்தது. இதனால் இரண்டாவது செட்டில் சிந்து வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய கட்டத்தில் அவர் சில தவறுகளை செய்ய ஆரம்பித்தார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வருதாணி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் இரண்டாவது செட்டிலும் வருதாணி 21க்கு 16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி சுமார் 66 நிமிடங்கள் நீடித்தது. சிந்துவுக்கு எதிராக வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்ததன் மூலம் வருதாணி கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியில் அழுதார். இதைப் போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடியான கப்பிலா, கிராஸ்டோ ஆகியோர் மலேசியா ஜோடியிடம் 21 க்கு 15, 21 க்கு 13 என்ற கணக்கில் தோல்வியை தழுவினர். இதன் மூலம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பயணம் இந்த தொடரில் முடிவுக்கு வந்தது.

Story first published: Friday, August 29, 2025, 23:09 [IST]
Other articles published on Aug 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+