Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஐ எம் வெரி ஹாப்பி".. "கட்டப்பை மாஸ்க்" கவுண்டமணியுடன்.. பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு

சென்னை: கும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மான்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா.. அது மாதிரி ஆகியுள்ளது நம்ம கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்துக்கு.. மருத்துவமனைக்கு போன இடத்தில் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியை எதேச்சையாக சந்திக்க நேர்ந்ததால் ஹாப்பியாகி விட்டார் பத்ரிநாத்.

Recommended Video

Badrinath met Goundamani in a hospital and took pic

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். தமிழக அணிக்காகவும், ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக ஆடியவர். இப்போது வர்ணனையாளராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை சந்திக்க நேர்ந்ததால் மனிதர் மகிழ்ச்சியாகி விட்டார். உடனே தலைவருடன் இணைந்து போட்டோ எடுத்து டிவிட்டரிலும் போட்டுள்ளார்.

கவுண்டமணி சந்திப்பு

கவுண்டமணி சந்திப்பு

லாக்டவுன் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர் பத்ரியும் வீட்டுக்குள்ளேயேதான் முடங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பல் டாக்டரைப் பார்க்கப் போயுள்ளார். போன இடத்தில் இன்ப அதிர்ச்சியாக நடிகர் கவுண்டமணியை சந்தித்துள்ளார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அவர் கவுண்டமணியுடன் பேசினார். பிறகு அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

அந்த போட்டோவை தற்போது டிவிட்டரில் போட்டுள்ளார். அதில், பல் டாக்டரைப் பார்க்கப் போன இடத்தில் எதிர்பாராதவிதமாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை பார்த்தேன். மகிழ்ச்சியான சந்திப்பு.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா என்று டிவீட் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் 2 மேட்டர் நம்ம கண்ணில் பட்டது.

அது மாஸ்க்கா.. கட்டப்பையா

அது மாஸ்க்கா.. கட்டப்பையா

ஒன்று பத்ரிநாத் செம உற்சாகத்தில் நிற்கிறார். கவுண்டமணி படு அடக்கமாக காணப்படுகிறார். 2வது மேட்டர் மாஸ்க். பத்ரிநாத் அதை முகவாய்க்கட்டையில் இறக்கி விட்டுள்ளார். கவுண்டரோ,, அதை கையில் எடுத்து கட்டப்பையை பிடிப்பது போல பிடித்துள்ளார். மொத்தத்தில் இந்த புகைப்படம் கமெண்ட்டுகளைக் குவித்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்ட கமெண்ட்டுதான் செம காமெடி.

கிங்ஸ் கமெண்ட் சூப்பரப்பு!

கிங்ஸ் கமெண்ட் சூப்பரப்பு!

கவுண்டமணி ஒரு படத்தில் இசையமைப்பது போல வரும் காட்சியை ஜிப் ஆக எடுத்து அதைப் போட்டு பத்ரிநாத் இப்போது என்று கூறி பத்ரியைக் கலாய்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த கமெண்டுக்கு ரசிகர்கள் பதில் கமெண்ட் கொடுக்க அந்த இடமே காமெடிக் கச்சேரியாக மாறிக் காணப்படுகிறது. ஆக மொத்தம் லாக்டவுன் சமயத்தில் இப்படிப்பட்ட பொழுதுபோக்குகளும் அவசியம்தான்.

Story first published: Thursday, June 4, 2020, 22:51 [IST]
Other articles published on Jun 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+