Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாலை பாதுகாப்பு தொடர்ல விளையாடுன வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு

டெல்லி : சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021 கடந்த மாதத்தில் துவங்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா ஜாம்பவான்கள் அணி இறுதிப்போட்டியில் சிறப்பான வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தொடர்

நடந்து முடிந்த தொடர்

சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் கடந்த மாதத்தில் துவங்கப்பட்டு சர்வதேச அளவில் 6 அணிகளின் முன்னாள் வீரர்கள் அதில் பங்கேற்று விளையாடினர். இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் மற்றும் இலங்கை ஜாம்பவான்கள் மோதினர்.

பாதிப்பு கண்டுபிடிப்பு

பாதிப்பு கண்டுபிடிப்பு

இந்த இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான்கள் வெற்றி கொண்டு கோப்பையை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிமைப்படுத்திக்கொண்ட பதான்

தனிமைப்படுத்திக்கொண்ட பதான்

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய யூசுப் பதானுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்று விளையாடிய முன்னாள் வீரர் பத்ரிநாத்திற்கும் தற்போது கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும், சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Monday, March 29, 2021, 16:07 [IST]
Other articles published on Mar 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+