Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் விக்கெட்கீப்பிங்கில் பேர்ஸ்டோவ்.. கடைசி போட்டிக்கான இங்கிலாந்து வீரர்கள் விவரம்

லண்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற நிலையில் ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது.

bairstow backs to wicket keeping and england playing 11 announced for final test


இங்கிலாந்து வீரர் குக்கின் கடைசி டெஸ்ட் போட்டி இதுவென்பதால் இங்கிலாந்து அணி வீரர்கள் அவரை வெற்றியுடன் வழியனுப்பி வைக்க கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே ஐந்தாவது போட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் காயம் காரணமாக கீப்பிங் செய்யாத பேர்ஸ்டோவ் இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் அறிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது வீரராக மொயீன் அலி களமிறங்குவார் என்றும்,கேப்டன் ரூட் அவரது ஆஸ்தான இடமான நான்காம் இடத்தில் களமிறங்குவார் என்றும் தெரிகிறது.

13 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற வோக்ஸ் மற்றும் போப் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து அணி விவரம் :

அலிஸ்டர் குக்

கேட்டான் ஜென்னிங்ஸ்

மொயீன் அலி

ஜோ ரூட் (கேப்டன்)

ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்)

ஜோஸ் பட்லர்

பென் ஸ்டோக்ஸ்

அடில் ரஷீத்

சாம் கர்ரன்

ஸ்டுவர்ட் பிராட்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

Story first published: Friday, September 7, 2018, 12:44 [IST]
Other articles published on Sep 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+