Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி உஷார்.. ரன் குவிப்பில் முந்தினார் பேர்ஸ்டோ.... 2018ல் ரன் குவித்தவர்களில் முதலிடம்!

Recommended Video

ரன் குவிப்பில் முந்தினார் பேர்ஸ்டோ....2018ல் ரன் குவித்தவர்களில் முதலிடம்!- வீடியோ

லண்டன் : 2018ஆம் ஆண்டில் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, இந்தியாவின் கோஹ்லியை முந்தினார்.

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து, இந்த ஆண்டு அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் பேர்ஸ்டோ முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோஹ்லி இருக்கிறார்.

பேர்ஸ்டோ 2018ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக 30 போட்டிகள் மற்றும் 35 இன்னிங்ஸ்களில், 1482 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒருநாள் போட்டிகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார் பேர்ஸ்டோ.

டெஸ்ட்டில் 8வது இடம்

டெஸ்ட்டில் 8வது இடம்

19 ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 970 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 445 ரன்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறார். டி20 போட்டிகளில் 67 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

ரன் குவிப்பில் கோஹ்லி நம்பர் 2

ரன் குவிப்பில் கோஹ்லி நம்பர் 2

அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இந்தியாவின் விராட் போஹ்லி ஆவார். அவர் 21 போட்டிகள் மற்றும் 25 இன்னிங்க்ஸ்களில் 1404 ரன்கள் எடுத்துள்ளார்.

கோஹ்லிதான் குறைந்த போட்டிகள்

கோஹ்லிதான் குறைந்த போட்டிகள்

பேர்ஸ்டோவுடன் ஒப்பிடும் போது கோஹ்லி குறைந்த போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். இந்த பட்டியலின்படி கோஹ்லியுடைய ஆவரேஜ் 66.85 ஆகும். ஆனால், பேர்ஸ்டோ உடைய ஆவரேஜ் 43.58 என்ற அளவில் தான் உள்ளது. அதே போல, ஒருநாள் போட்டிகளில் 9 இன்னிங்க்ஸ்களில் 749 ரன்கள் குவித்துள்ளார் கோஹ்லி.

8 வீரர்கள் ஆயிரத்துக்கு மேல்

8 வீரர்கள் ஆயிரத்துக்கு மேல்

இந்த ஆண்டில் இதுவரை எட்டு வீரர்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தகுந்த வீரராக பாகிஸ்தானின் ஃபாகர் ஸமான் இருக்கிறார். இவர் இதுவரை 1181 ரன்கள் எடுத்து இருக்கிறார். இவர் விராட் கோஹ்லிக்கு இணையாக 65.61 ஆவரேஜ் வைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. தற்போது டெஸ்ட் போட்டுகளில் சொதப்பி வரும் ஷிகர் தவான், ஒருநாள் மற்றும் டி20 பொட்டிகளில் ரன் குவித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 1055 ரன்கள் எடுத்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Story first published: Monday, August 13, 2018, 7:52 [IST]
Other articles published on Aug 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+