குணதிலகா 6 போட்டிகளில் விளையாட தடை
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம்,இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணாதிலகாவுக்கு 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
அவர் போட்டியின் விதிமுறைகளை மீறியதாலும்,வீரர்களின் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாலும் அவருக்கு தடை விதிக்கபட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இவர் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர் மீதான தடையை அறிவித்து விசாரணையை தொடங்கியது. முடிவில் அவர் மீது 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு போட்டிக்கான தடையானது,முதல் மூன்று போட்டிகள் தடையானது தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் நடத்தை விதிமுறை மீறலுக்காகவும்,மீதமுள்ள மூன்று போட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட தடை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது 3 போட்டிகளாக குறைக்கப்பட்டது. அதுவே தற்போது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்கு வேண்டிய ஒருவர் பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக போலீஸ் குணாதிலகவிடம் போலீஸ் விசாரணை செய்து அவர் குற்றமற்றவர் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு நெருக்கமான ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குணாதிலகா இதுபோன்று நடத்தை விதிமீறல் செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 மாதங்களில் அவர்மீது இதுபோன்று 3 முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, July 27, 2018, 21:58 [IST]
Other articles published on Jul 27, 2018


Click it and Unblock the Notifications