Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசம் 64 ரன்களுக்கு ஆல் அவுட்.. துண்டு ஒரு தடவை தான் தவறும்.. ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு

மேக்கே: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. டார்வின் டெஸ்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று உத்வேகத்துடன் களம் கண்ட வங்கதேச அணியை, ஆஸ்திரேலிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார்.

டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸிலேயே மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர். குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 10 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Ban vs aus 2nd test

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 10 ஓவர்கள் வீசி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவருக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கினார். ஜோஷ் ஹேசில்வுட் 11 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து தனது பங்கிற்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.

WTC 2027 புள்ளி பட்டியல்.. இந்திய அணி புள்ளிகள் கிடுகிடுவென உயர்வு.. ஆனால் டுவிஸ்ட்

WTC 2027 புள்ளி பட்டியல்.. இந்திய அணி புள்ளிகள் கிடுகிடுவென உயர்வு.. ஆனால் டுவிஸ்ட்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, தங்களது மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரான 43 ரன்களுக்குள் சுருண்டுவிடும் அபாயத்தில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த தைஜுல் இஸ்லாம் 11 ரன்கள் மற்றும் ஷோரிபுல் இஸ்லாம் 14 ரன்கள் ஆகிய கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் வங்கதேசம் 50 ரன்களைக் கடந்து, இறுதியில் 64 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.வங்கதேசத்தை குறைந்த ரன்களுக்கு சுருட்டிய உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. ஜேக் வெதரால்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட மேட் ரென்ஷா, டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது புதிய பந்துடன் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளார்.

IND vs SL: ரிஷப் பண்ட்-ஐ குறை சொல்ல மாட்டேன், அவருடைய அறிவை தான் விமர்சிப்பேன்.. கையிப் தாக்கு

Also Read

IND vs SL: ரிஷப் பண்ட்-ஐ குறை சொல்ல மாட்டேன், அவருடைய அறிவை தான் விமர்சிப்பேன்.. கையிப் தாக்கு

இப்போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அதேபோல், ஸ்டீவ் ஸ்மித் இன்னும் 50 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது அதிக ரன் குவித்த வீரரான ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 22, 2026, 9:40 [IST]
Other articles published on Aug 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+