Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹாசன்

டாக்கா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தொடரைக் கைப்பற்றிய கையோடு வங்கதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்காவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங் செய்துகொண்டிருந்தது.

ஆட்டத்தின் 34வது ஓவரை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித் வீசினார். அவர் வீசிய அதிவேக பவுன்சர் பந்து, மெஹிதி ஹாசனின் ஹெல்மெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், உடனடியாக தலையைப் பிடித்தபடி மைதானத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தார்.

BAN vs AUS Mehidy Hasan Miraz Hospitalized After Leading Bangladesh to Historic ODI Series Win Over Australia

உடனடியாக வங்கதேச அணியின் உடற்பயிற்சி நிபுணர் பேஜெதுல் இஸ்லாம் கான் மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போது, மெஹிதி ஹாசன் மைதானத்திலேயே வாந்தி எடுத்த காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையிலும், அவர் அதை மறுத்துவிட்டு மீண்டும் பேட்டிங் செய்ய எழுந்து நின்றார்.

கடும் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய கேப்டன் மெஹிதி ஹாசன், ஒரு சிக்சர் அடித்து வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முதன்முறையாக வென்று புதிய சாதனை படைத்தது.

போட்டி முடிந்த பிறகு மெஹிதி ஹாசன் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அணியின் உடற்பயிற்சி நிபுணர் கூறுகையில், "அவருக்கு லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் முதலுதவிக்குப் பிறகு அவர் விளையாடினாலும், பாதுகாப்பு கருதி அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளார்" என்றார்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து.. முதல் போட்டியிலேயே 3 ரெட்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

FIFA உலகக் கோப்பை கால்பந்து.. முதல் போட்டியிலேயே 3 ரெட்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

கேப்டன் மெஹிதி மருத்துவமனைக்குச் சென்றதால், பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறுகையில், "அவர் நலமாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாக உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் காட்டிய தைரியம் தான் வெற்றிக்கு காரணம்" என்றார்.

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகும் இந்திய டி20 தொடருக்கு பெரும் சிக்கல்.. அயர்லாந்தில் அசாதாரண சூழல்

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகும் இந்திய டி20 தொடருக்கு பெரும் சிக்கல்.. அயர்லாந்தில் அசாதாரண சூழல்
Story first published: Friday, June 12, 2026, 9:00 [IST]
Other articles published on Jun 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+