BAN vs HKG: முதல் முறையாக ஹாங்காங் அணியை வீழ்த்திய வங்கதேசம்.. லிட்டன் தாஸ் தயவால் வென்ற பங்களாதேஷ்
சார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் வெற்றியை வங்கதேச அணி பெற்று இருக்கிறது.
இதற்கு முன்பு இரு அணிகளும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மோதியது. இதில் வங்கதேச அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தோல்விக்கு வங்கதேச அணி பழி தீர்த்துக் கொண்டது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹாங்காங் அணி சொற்ப ரன்களில் சுருண்டு விடும் என ரசிகர்கள் இந்த போட்டியின் மீது ஆர்வமே காட்டவில்லை. ஆனால் ஹாங்காங் வீரர்கள் வங்கதேச பந்துவீச்சுக்கு கொஞ்சம் டப் கொடுத்து நல்ல ஸ்கோரை அடித்தனர். .
தொடக்க வீரர் ஷிஸான் அலி 30 ரன்களும், பாபர் ஹயாத் 14 ரன்களும் எடுக்க நடு வரிசையில் நிசாகத் கான் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஹாங்காங் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பர்வேஸ் 19 ரன்களிலும், டன்ஷித் ஹசன் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹிர்தாய் நிதானமாக விளையாடினர். தவ்ஹீத் 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். முதலில் பொறுமை காத்த லிட்டன் தாஸ் முக்கியமான கட்டத்தில் கொஞ்சம் அதிரடி காட்டினார். மேலும் ஹாங்காங் வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெருக்கடியை கொடுத்தனர். இதனால் பௌண்டரி அதிக அளவு வரவில்லை. இதனை சரி கட்டுவதற்காக வங்கதேச வீரர்கள் ஓடியே ரன்கள் எடுத்தனர். இதனால் லிட்டன் டாஸ் 39 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இதன் மூலம் 17.4 ஓவரில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எட்டியது.
இந்த போட்டியில் லிட்டன் தாஸ் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் வங்கதேச t20 வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த முகமதுல்லாவின் சாதனையை பின்னுக்குத் தள்ளி லிட்டன் தாஸ் முதலிடம் பிடித்திருக்கிறார். முஹம்மதுல்லா 77 சிக்ஸர்களை அடித்த நிலையில், தற்போது லிட்டர்ன் டாஸ் 78 சிக்சர் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications