For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா நிற்கும் பேட்ஸ்மேன் மீது பந்தை எறிவாயா? வங்கதேச பவுலர் நஹித் ரானாவுக்கு தண்டனை கொடுத்த ஐசிசி

சில்ஹெட்: வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே சில்ஹெட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், ஆக்ரோஷமாக நடந்துகொண்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துத் தண்டித்துள்ளது. பேட்ஸ்மேன் மீது பந்தை எறிந்ததற்காக, நஹித் ரானாவின் போட்டிச் சம்பளத்தில் இருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ஒழுங்கு நடவடிக்கைப் பதிவில் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் 27-வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது பந்துவீசிய நஹித் ரானா, பந்தை ஃபாலோ-த்ரூவில் பிடித்து, பேட்டிங் செய்துகொண்டிருந்த பேட்ஸ்மேன் கேட் கார்மைக்கேல் மீது அதைத் திரும்ப எறிந்தார்.

BAN vs IRE Test Bangladesh Pacer Nahid Rana Fined by ICC for Aggressive Throw at Batsman

ஆனால், பேட்ஸ்மேன் கார்மைக்கேல் ரன் ஓட முயற்சிக்கவில்லை; கிரீஸுக்குள்ளேயே பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தார். ஆனாலும், நஹித் ரானா எறிந்த பந்து, அவரது பேடில் பலமாகத் தாக்கியது. கள நடுவர்கள் உடனடியாக இந்தச் செயலை முறையற்றது மற்றும் ஆபத்தானது எனக் கருதி, போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர்.

ஐசிசி-யின் நடத்தை விதி 2.9-ன் படி, ஒரு சர்வதேசப் போட்டியின்போது, ஒரு வீரர் மீது அல்லது அவருக்கு அருகில் பந்து அல்லது கிரிக்கெட் உபகரணங்களை முறையற்ற மற்றும் ஆபத்தான முறையில் எறிவது குற்றமாகும்.

இது லெவல் 1 குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச தண்டனை அதிகாரப்பூர்வ கண்டனம், அதிகபட்சமாக 50% போட்டிச் சம்பள அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்படும். நஹித் ரானாவுக்கு 25% அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவர் பெறும் முதல் தகுதி இழப்புப் புள்ளி இதுவாகும்.

இந்தச் சம்பவம் ஒருபுறம் இருந்தாலும், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய், ஆட்டமிழக்காமல் 169 ரன்கள் குவிக்க, வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 286 ரன்களைக் கடந்து, தற்போது 52 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேசம் பெரிய முன்னிலையை நோக்கிப் பயணித்து வருகிறது.

Story first published: Thursday, November 13, 2025, 10:00 [IST]
Other articles published on Nov 13, 2025
English summary
BAN vs IRE Test: Bangladesh Pacer Nahid Rana Fined by ICC for Aggressive Throw at Batsman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+