Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் நாளிலேயே முதல் சதம் விளாசிய நியூசி. வீரர் அசத்தல்

மவுண்ட் மாங்கானி: 2022ஆம் ஆண்டின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியும், வங்கதேச அணியும் மோதின

மவுண்ட் மாங்கானியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

காயம் காரணமாக வில்லியம்சன் ஓய்வில் இருப்பதால், டாம் லாத்தம் நியூசிலாந்து அணிக்கு தலைமை தாங்கினார்

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

தொடக்க வீரராக களமிறங்கிய டாம் லாத்தம் ஒரு ரன்னிலே சொரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் புத்தாண்டில் முதல் விக்கெட் எடுத்த பெருமை இஸ்லாம்க்கு சேர்ந்தது. இதனையடுத்து வில் யாங், கான்வே ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது

ராஸ் டைலர்

ராஸ் டைலர்

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 138 ரன்கள் எடுத்தது. வில் யங் 52 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். அப்போது தனது கடைசி டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ராஸ் டைலருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டைலர் 31 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்

முதல் சதம்

முதல் சதம்

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தேவோன் கான்வே புத்தாண்டின் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 227 பந்துகளை எதிர்கொண்ட அவர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. ஹேன்ரி நிக்கோலஸ் களத்தில் 32 ரன்கள் எடுத்தார்.

தெ.ஆப்பிரிக்கா கான்வே

தெ.ஆப்பிரிக்கா கான்வே

வங்கதேச தரப்பில் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்துக்கு அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடும் கான்வே தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி, அவர் அங்கிருந்து நியூசிலாந்துக்கு குடியேறினார். தற்போது நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இது போன்ற திறமையான வீரர்களை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி தவற விடுவதால், தற்போது அந்த அணி சரிவை நோக்கி செல்கிறது.

Story first published: Saturday, January 1, 2022, 19:43 [IST]
Other articles published on Jan 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+