For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BAN vs NZ : பயங்காட்டிய வங்கதேசம்.. தடுக்கி விழுந்து வெற்றி பெற்ற நியூசிலாந்து.. என்ன ஆச்சு?

Recommended Video

நியூசிலாந்துக்கு 245 ரன்களை இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

லண்டன் : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன ஒன்பதாவது உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி சேஸிங்கில் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 244 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு மிகவும் வலுவாக இருந்த நிலையிலும், வங்கதேச வீரர்கள் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

BAN vs NZ Cricket World cup 2019 : Bangladesh vs New Zealand match report

அடுத்து சேஸிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக ரன் குவித்தாலும், விக்கெட்களை வேகமாக இழந்து, பின் தடுமாறி வெற்றி கோட்டை தாண்டியது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் 24 ரன்கள் சேர்த்தும், சௌம்யா சர்க்கார் 25 ரன்கள் சேர்த்தும் சுமாரான துவக்கம் அளித்தனர்.

மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் 64 ரன்கள் சேர்த்து வங்கதேச அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றார். எனினும், அவருக்கு பின் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவுக்கு தாக்குப் பிடித்து ஆடவில்லை.

முஷ்பிகுர் ரஹீம் 19, மிதுன் 26, மக்மதுல்லா 20, ஹுசைன் 11, சைபுதின் 29 ரன்கள் எடுத்தனர். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 49.2 ஓவர்களில் வங்கதேசம் 244 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர். மாட் ஹென்றி 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். ட்ரென்ட் பவுல்ட் 2, பெர்குசன் 1, கிராண்ட்ஹோம் 1, மிட்செல் சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து நியூசிலாந்து அணி 245 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் ஆடத் துவங்கியது. துவக்க வீரர் மார்டின் குப்டில் அதிரடியாக 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கோலின் மன்றோ 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்சன் ஆமை வேகத்தில் ஆடி 72 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் அரைசதம் அடித்து 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் நியூசிலாந்து அணி சிறிய சரிவை சந்தித்தது.

டாம் லாதம் டக் அவுட் ஆனார். நீஷம் 25, கிராண்ட்ஹோம் 15, ஹென்றி 6 ரன்களில் ஆட்டமிழந்து வரிசையாக வெளியேற, நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. எனினும், அதிக பந்துகள் கைவசம் இருந்ததால், சமாளித்த நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2 வெற்றிகள் பெற்று உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Story first published: Thursday, June 6, 2019, 2:14 [IST]
Other articles published on Jun 6, 2019
English summary
BAN vs NZ Cricket World cup 2019 : Bangladesh vs New Zealand match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+