Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றிலேயே இல்லாத மோசமான ரெக்கார்டை செய்த பாகிஸ்தான்.. வங்கதேச அணிக்கு எதிராக ஆல் - அவுட்

தாகா: வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி படுமோசமான சாதனையை படைத்தது. ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாமல் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சல்மான் அலி அகா தலைமையிலான அணி ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்த 110 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் மிகக் குறைந்தபட்ச ரன்களாகும். மேலும், வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது இதுவே முதல் முறை.

BAN vs PAK Pakistan Suffers Record Low Score of 110 Against Bangladesh in First T20I

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் 34 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 44 ரன்கள் விளாசினார். குஷ்தில் ஷா 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார், அப்பாஸ் அப்ரிடி 24 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 22 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர் 129 ரன்கள் ஆகும். 2016இல் இந்த ஸ்கோரை பாகிஸ்தான் பதிவு செய்தது.

வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் குறைந்தபட்ச ஸ்கோர்கள்

  • 110/10, ஜூலை 20, 2025

  • 127/5, நவம்பர் 22, 2021

  • 129/7, மார்ச் 2, 2016

  • 135/7, நவம்பர் 29, 2011

  • 141/5, ஏப்ரல் 24, 2015

வங்கதேச அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அகமது 3.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் நான்கு ஓவர்களில் ஆறு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார்.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா உள்ளிட்டோர் இல்லாமல் பாகிஸ்தான் விளையாடுகிறது. பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷஹீன் மற்றும் நசீம் ஷா ஆகியோர் இனி பாகிஸ்தானின் டி20 அணியில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபர் ஆசம் டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக அதிக ரன் குவித்தவர் ஆவார். அவர் 128 டி20 போட்டிகளில் 4223 ரன்கள்எடுத்துள்ளார். முகமது ரிஸ்வான் இதுவரை விளையாடிய 106 டி20 போட்டிகளில் 3414 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், ஷஹீன் 79 போட்டிகளில் 102 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இது போன்ற அனுபவ வீரர்களை நீக்கியதால் தான் பாகிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Story first published: Monday, July 21, 2025, 12:16 [IST]
Other articles published on Jul 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+