Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை.. 10 ஆண்டுகளில் ஆசிய மண்ணில் முதல் வெற்றி

தாகா: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி ஆசிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் ஆசிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமாகும். அதே சமயம் தென்னாப்பிரிக்க அணிக்கும் ஆசிய மண்ணில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருக்கிறது.

ban vs sa south africa bangladesh

முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது. வங்கதேச அணியை 106 ரன்களில் ஆல் அவுட் செய்து அசத்தியது தென்னாப்பிரிக்கா. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 308 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய வேகப்பந்துவீச்சாளர் வியான் முல்டர் 54 ரன்கள் சேர்த்தார்.

அதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய வங்கதேச அணி 112 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இன்னிங்க்ஸ் தோல்வியை நோக்கி அந்த அணி சென்ற நிலையில் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் ஜாக்கர் அலி அணியை மீட்டனர். மெஹிதி ஹாசன் 97 ரன்களும், ஜாக்கர் அலி 58 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணிக்கு 106 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி நான்காம் நாள் அன்று 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

2014இல் இலங்கை அணிக்கு எதிராக இலங்கை மண்ணில் தென்னாப்பிரிக்கா பெற்ற டெஸ்ட் வெற்றியே அந்த அணியின் கடைசி ஆசிய டெஸ்ட் வெற்றி ஆகும். அதன் பின் ஆசிய கண்டத்தில் தென்னாப்பிரிக்கா எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அதே போல, வங்கதேச மண்ணில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.

10 ஆண்டுகளுக்கு பின் ஆசிய மண்ணிலும், 16 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேச மண்ணிலும் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்து இருக்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 47.61 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது தென்னாப்பிரிக்கா.

அந்த அணி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனக்கு மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வென்றால் 69.4 என்ற வெற்றி சதவீதத்துடன் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற முடியும். அதன் மூலம், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தென்னாப்பிரிக்கா தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, October 24, 2024, 12:15 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+