Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

32 பந்தில் 62 ரன்.. இப்படி ஒரு சான்ஸ் இனிமே கிடைக்காது.. பாவப்பட்ட டீமை அடித்து துவைத்த வீரர்!

தாகா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வங்கதேச வீரர் சௌம்யா சர்க்கார் அதிரடி ஆட்டம் ஆடினார்.

Recommended Video

BAN VS ZIM 1ST T20 | Soumya Sarkar, Liton Das Help Bangladesh Crush Zimbabwe

வங்கதேசம் அந்தப் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்-ம் அரைசதம் அடித்து இருந்தார்.

ஜிம்பாப்வே அணி பலவீனமான நிலையில் இருப்பதால், அதை பயன்படுத்தி வங்கதேச வீரர்கள் 200 ரன்கள் குவித்தனர்.

ஜிம்பாப்வே பரிதாபம்

ஜிம்பாப்வே பரிதாபம்

ஜிம்பாப்வே அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி தோல்வி அடைந்தது. அடுத்து நடந்த ,மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 - 0 என தோல்வி அடைந்தது. அடுத்து டி20 தொடரில் ஆடி வருகிறது.

முதல் பேட்டிங்

முதல் பேட்டிங்

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தாகாவில் நடைபெற்றது. ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து அபாரமாக ரன் குவித்தது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

வங்கதேச அணிக்கு துவக்க வீரர் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் அபார துவக்கம் அளித்தனர். தமிம் இக்பால் 33 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 3 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து அசத்தினார். லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தார்.

லிட்டன் தாஸ் அதிரடி

லிட்டன் தாஸ் அதிரடி

லிட்டன் தாஸ் 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார் அவர். அடுத்து வந்த சௌம்யா சர்க்கார் இவர்கள் இருவரையும் விட அதிக வேகத்தில் ரன் குவித்தார். அவர் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

சௌம்யா சர்க்கார் மிரட்டல்

சௌம்யா சர்க்கார் மிரட்டல்

சௌம்யா சர்க்கார் 32 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 193 ஆக இருந்தது. கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் நின்றார். ரஹீம் 8 பந்துகளில் 17 ரன்களும், மக்மதுல்லா 9 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர்.

200 ரன்கள் குவித்தது

வங்கதேசம் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து 200 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே வீரர் ஃபோபு 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜிம்பாப்வே 201 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியது.

ஜிம்பாப்வே தடுமாற்றம்

அந்த அணியின் துவக்க வீரர் பிரெண்டன் டெய்லர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து எர்வின் 8, மாதவேரே 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக காமுன்ஹுக்கம்வே 28 ரன்கள் எடுத்தார். மும்பா 25 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்கு முயற்சி

வெற்றிக்கு முயற்சி

மூன்று வீரர்கள் தலா 20 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. விக்கெட்களை இழந்தாலும் அந்த அணி அதிரடி ஆட்டம் ஆட தொடர்ந்து முயன்று வந்தது. 9 சிக்ஸர்களை அடித்தது.

ஜிம்பாப்வே தோல்வி

எனினும், ஜிம்பாப்வே 19 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே. முஸ்தாபிசூர் ரஹ்மான், அமினுல் இஸ்லாம் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் யார்?

ஆட்ட நாயகன் யார்?

வங்கதேசம் டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டம் ஆடிய சௌம்யா சர்க்கார் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இடையே சரியாக ஆடாமல் இருந்து வந்த சௌம்யா சர்க்கார், ஜிம்பாப்வே அணியை வைத்து தன் பார்மை மீட்டுக் கொண்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, March 10, 2020, 15:23 [IST]
Other articles published on Mar 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+