கொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை!
தாகா : வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஜஹாநாரா ஆலம் வேலை இல்லாத, உணவு கிடைக்காத ஏழைகளுக்கு உதவி வருகிறார்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது.
அதனால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, பலர் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். அவர்களில் சிலருக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை வழங்கி வருகிறார் ஜஹாநாரா ஆலம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகில் இதுவரை 8,50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். 43,000 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்கா தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மட்டும் 1,88,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியா, ஐரோப்பா பாதிப்பு
ஐரோப்பா கண்டமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் உள்ளது.

பொருளாதார அடி
இதில் வங்கதேச நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவு தான் என்றாலும் அதனால் ஏற்பட்டுள்ள லாக்டவுன், ஊரடங்கு மற்றும் பீதி பலத்த பொருளாதார அடியை கொடுத்துள்ளது. பலர் அடுத்த வேலை உணவின்றி வாடும் நிலை உள்ளது.
முன்பு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் சம்பளத்தில் பாதியை கொரோனா விரசப் நிவாரண நிதிக்காக அளித்தனர். முன்னாள் கேப்டன் மஷ்ராபே மொர்டாசா தன் சொந்த ஊரில் உள்ளார் 300 குடும்பங்களுக்கு தன்னால் ஆன உதவியை வழங்கினார்.

ஆலம் உதவி
அதே போல, தற்போது வங்கதேச மகளிர் அணி வீராங்கனை ஆலம், ஏழை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார். அது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் மற்றவர்களையும் அதே போல உதவ முன்வருமாறு அழைத்துள்ளார்.

கோரிக்கை விடுத்தார்
அவரது பேஸ்புக் பதிவில், "இது மக்களுக்கு காட்ட வேண்டும் என பதிவிடப்பட்டது அல்ல. நான் அவர்களுடன் என்னால் முடிந்த வரை நிற்பேன். உதவி கிடைக்காதவர்களுக்காக நீங்களும் நிற்க வேண்டும்." என கோரிக்கை விடுத்துள்ளார்.
மோசமான நிலையில் நாடு
5 அல்லது அதற்கும் மேல் உங்களால் இயன்ற அளவு முன்வந்து உதவி செய்யுங்கள். நாடு இந்த மோசமான நிலையில் இருக்கும் போது, நாம் அவர்களுக்கு உதவி செய்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications