Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருங்கும் ஐபிஎல் தொடர்.. புதிய டாட்டூ உடன் வந்த விராட் கோலி.. மகளின் பெயராக இருக்குமோ?

பெங்களூரு: பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கைகளில் வரைந்து வரும் புதிய டாட்டூ பற்றி கணிப்புகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் விளம்பர மாடலாகவும் இருப்பதால் உடல் அழகை பராமரிப்பதில் முன்னணியில் இருப்பவர் விராட் கோலி.

விராட் கோலிக்கு பின்னரே இந்திய அணியில் உள்ள வீரர்களில் "டாட்டூ" போட்டுக் கொள்ளும் பழக்கம் அதிகமானது. இவரை பின்பற்றி கேஎல் ராகுல், சாஹல், இஷான் கிஷன், உமேஷ் யாதவ், பும்ரா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் உடலில் டாட்டூ போட்டுக் கொண்டனர்.

விராட் கோலியின் டாட்டூ

விராட் கோலியின் டாட்டூ

அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் "டக் தாடி" ஸ்டைல் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இவரைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்களும் டக் தாடி மட்டுமல்லாமல் டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கத்தையும் பின்பற்றினர். இதுவரை விராட் கோலி தனது கைகள் மற்றும் உடலில் 11 வகையான டாட்டூவை போட்டுக் கொண்டுள்ளார்.

தாய், தந்தை பெயர்

தாய், தந்தை பெயர்

இதில் முதல் டாட்டூ பழங்குடியினர் கலை குறித்த ஒரு டாட்டூ. அது ஆதிக்கத்தின் அடையாளம் என்று விளக்கமளித்தார். அவரது ஆட்டமுறையை குறிக்கும் வகையில் அந்த டாட்டூ போட்டுக் கொண்டார். அதேபோல் தனது தாய் சரோஜ் மற்றும் தந்தை பிரேம் ஆகியோரின் பெயர்களை டாட்டூ வரைந்துள்ளார்.

விருச்சக ராசி

விருச்சக ராசி

அதேபோல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிக்காக 175வது வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் 269ஆவது வீரராக விராட் கோலி களமிறங்கினார். அந்த எண்களையும் உடலில் டாட்டூ-வாக வரைந்துள்ளார். அதன்பின்னர் விருச்சக ராசிகாரரான விராட் கோலி விருச்சக ராசியின் "Scorpio" என்றும், தேள் சின்னத்தையும் வரைந்துள்ளார்.

 சாமுராய் டாட்டூ

சாமுராய் டாட்டூ

அதேபோல் ஜப்பானின் சாமுராய் வீரனின் படத்தையும் விராட் கோலி தனது தோள்பட்டையில் டாட்டூவாக போட்டுக் கொண்டுள்ளார். சாமுராய் டாட்டூ தனக்கு பலமுறை உத்வேகம் அளித்துள்ளதாக விராட் கோலி கூறியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலி 12ஆவதாக புதிய டாட்டூ ஒன்றையும் வரைந்து கொண்டுள்ளார்.

புதிய டாட்டூ என்ன?

புதிய டாட்டூ என்ன?

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், கைகளில் புதிய டாட்டூ போட்டு வருவது உண்மைதான். ஆனால் டாட்டூ இன்னும் முழுமையாக வரையப்படவில்லை. அதனால் அதன் அர்த்தத்தை இப்போது கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். புதிய கோலி வரைந்து வரும் புதிய டாட்டூ என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர், விராட் கோலி தனது குழந்தையின் பெயரை கைகளில் வரைய வாய்ப்பு இருப்பதாக கணித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, March 29, 2023, 15:54 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+