முதல் இன்னிங்ஸில் இந்தியா 495க்கு ஆல் அவுட்-சச்சின் இரட்டை சதம்

பெங்களூரில்,இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 478 ரன்களைக் குவித்தது.
இதற்கு இந்தியாவின் முரளி விஜய்யும், சச்சினும் சரியான பதிலடி கொடுத்தனர். முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் போட்டார். 139 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
மறு முனையில் சச்சின் நேற்று தனது 49வது சதத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்தார். இந்த நிலையில் இன்று தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார் டெண்டுல்கர்.
358 பந்துகளைச் சந்தித்து 200 ரன்களைக் கடந்த சச்சின் 22 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் விளாசினார். இந்த இரட்டை சதம் சச்சினுக்கு 6வது இரட்டை சதமாகும். இரட்டை சதம் போட்ட அடுத்த சில பந்துகளிலேயே சச்சின் ஆட்டமிழந்தார். அவர் 214 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜார்ஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கேப்டன் டோணி 30 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் மளமளவென விழுந்தன. இறுதியில், 495 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்து போனது.
இதுதான் இந்தியா. முக்கியமான வீரர் ஆட்டமிழந்து போய் விட்டால் வரிசையாக அத்தனை பேரும் அவுட் ஆகி விடுவார்கள். இந்த வியாதி எப்போது இந்திய அணியை விட்டு நீங்கும் என்பது தெரியவில்லை.
சச்சின் ஆடியவரை 484 ரன்களை வைத்திருந்த இந்தியா, அவர் ஆட்டமிழந்ததும் மளமளவென விக்கெட்களைப் பறி கொடுத்து 495 ரன்களில் நின்று விட்டது.
தற்போது ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications