Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசம் கொஞ்சம் கூட திருந்தல.. தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா குறித்து கேலி.. வலுக்கும் எதிர்ப்பு

பிரிஸ்பேன்: தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமாவின் உயரத்தை கேலி செய்யும் விதமாக வங்கதேச ரசிகர்கள் போட்ட டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்திலேயே மற்ற நாட்டு ரசிகர்களுக்கு பிடிக்காத அணி என்றால், அவர்கள் முதலில் சொல்வது வங்கதேசத்தின் பெயர் தான்.

காரணம், வங்கதேச அணி வீரர்களின் செயல்களும், ரசிகர்களின் சேட்டைகளும் அந்த அளவிற்கு மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

வங்கதேச அணி

வங்கதேச அணி

நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள். அதற்கு எதிர்மறையான உதாரணம் என்றால் வங்கதேசம் தான். வங்கதேச அணி வீரர்கள் திறமையாக விளையாடினாலும் அவர்கள் களத்தில் நடந்து கொள்வது வெறுப்பை மட்டுமே சம்பாரிக்க முடியும். பாம்பு டான்ஸ் ஆடுவது, வெற்றி பெறும் முன்பே கொண்டாடுவது போன்ற செயல்கள் இதற்கு உதாரணம்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

2016 டி20 உலககோப்பையில் கூட இந்திய அணி தோல்வியை தழுவிய போது, தொலைக்காட்சிக்கு முன் வீட்டில் நின்ற வாறு செல்ஃபி எடுத்து இந்திய அணி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். இதே போன்று தோனியின் புகைப்படத்தை வைத்து வறும்புகளை தாண்டும் விதமாக வங்கதேச ரசிகர்கள் புகைப்படம் போட்டதும் பெரும் சர்ச்சை ஆனது.

கேலி புகைப்படம்

கேலி புகைப்படம்

இந்த நிலையில், நேற்று பிரிஸ்பேன் நகரில் வங்கதேசமும், தென்னாப்பிரிக்காவும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க இருந்தது. இந்த போட்டி குறித்து அபுதாபி டி10 தொடரில் விளையாடும் பங்களா டைகர்ஸ் என்ற அணி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஷகிபுல் ஹசனின் புகைப்படத்தை உயரமாகவும், அவருடைய இடுப்பு வரை மட்டும் பெவுமாவின் புகைப்படத்தை சிறியதாகவும் போட்டுள்ளது.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

இதற்கு கடும் கண்டன்ம் தெரிவித்துள்ள ரசிகர்கள், வங்கதேசம் கொஞ்சம் கூட திருந்தவில்லை என்று பதிவிட்டுள்ளனர். வேறு சிலர், வங்கதேச ரசிகர்கள் மற்றவர்களை மதிக்காத வரை, அவர்களை யாரும் மதிக்க போவதில்லை என்று விமர்சித்துள்ளனர். இதற்கு பதிலடி தந்துள்ள வங்கதேச ரசிகர்கள் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா தான் இது போன்று தங்களது கேப்டனை கேலி செய்து புகைப்படத்தை வெளியிட்டதாகவும், அதற்கு தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Thursday, October 20, 2022, 12:38 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+