Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேண்டுமென்றே பிரச்சினை தருவதா??.. ஐபிஎல்-ல் வங்கதேசம், இலங்கை வீரர்கள் இனி புறக்கணிப்பு.. என்ன ஆனது?

மும்பை: அடுத்தாண்டு ஐபிஎல் தொடர்களின் ஏலத்தின் போது வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அணிகளின் அதிருப்தியை அடுத்து இந்த முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

வழக்கத்தை விட இந்தாண்டு மிக அதிகளவில் வீரர்களும் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் காயம் காரணமாக வெளியேறுவது கூட நியாயமாக உள்ளது. ஆனால் இன்னும் சிலர் வராமல் இருப்பதற்கான காரணம் தான் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

வங்கதேசத்தின் முடிவு

வங்கதேசத்தின் முடிவு

வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் சரியாக ஐபிஎல் நேரத்தில் சர்வதேச போட்டிகளுக்கு அட்டவணை போட்டுவிடுகிறது. அந்தவகையில் இந்தாண்டு சகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்திவிசூர் ரஹ்மான் என 3 வங்கதேச வீரர்கள் தான் ஐபிஎல்-ல் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் சரியான அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் மூவரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தான் விளையாடுவார்கள். அதன்பின் சர்வதேச கடமைக்கு சென்றுவிட்டு மீண்டும் மே 15ம் தேதிக்கு மேல் தான் இந்தியா வருவார்கள்.

இலங்கை தந்த சிக்கல்

இலங்கை தந்த சிக்கல்

இதே போல தான் இலங்கையும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டில் இருந்து 4 வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளனர். ஆனால் அவர்கள் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தை தவறவிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துடனான சர்வதேச போட்டிகள் இருப்பதால் அதனை முடித்துவிட்டு வரவுள்ளனர். இதுபோன்ற செயல்களால் அணியின் காம்பினேஷன் சரிவர செட்டாகாமல் போய்விடும்.

அணிகளின் அதிருப்தி

அணிகளின் அதிருப்தி

இதுகுறித்து பேசியுள்ள ஐபிஎல் நிர்வாகம் ஒன்று, வீரர்களுக்கு அனுமதி கிடைக்காதது குறித்து நாங்கள் எந்தவித புகாரும் அளிக்க முடியாது. ஏனென்றால் மற்ற வாரியங்களுக்கு பிசிசிஐ ஒத்துழைத்து செல்கிறது. ஆனால் இதுபோன்று முழுவதுமாக இருக்க முடியாது என்றால், ஐபிஎல் ஏலத்திற்காக பெயரை பதிவிடவே கூடாது. அதனையும் செய்துவிட்டு, தற்போது விளையாடவும் வரவில்லை என்பது கொஞ்சம் கூட சரியில்லை எனத்தெரிவித்துள்ளது.

புறகணிப்பா?

புறகணிப்பா?

எனவே அடுத்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்களை அனைத்து ஐபிஎல் அணிகளும் ஒன்று சேர்ந்து புறகணிக்கும் எனத்தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 இலங்கை அணிகள் விளையாடி வருகின்றனர். இதே போல சகிப் அல் ஹசன் நீண்ட வருடங்களாக ஐபிஎல்-ல் முக்கியமான வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 25, 2023, 19:31 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+