ஆசிய கோப்பை போட்டிக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு
மிர்பூர் : ஆசியா கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கின்றன.
இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 6ஆவதாக பங்குபெறும் அணிக்காக தகுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பிடிப்பாரா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த சாகிப் அல் ஹசன்,15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ஆசிய கோப்பை போட்டிகளுக்காக தனது காயத்தின் அறுவை சிகிச்சையை தள்ளி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் செப்டம்பர் 6ஆம் தேதி அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ஆல் ரவுண்டர் சபீர் ரஹ்மான் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முஷ்ரபி மொர்தசா தலைமையிலான வங்கதேச அணி விவரம் :
முஷ்ரபி மொர்தசா (கேப்டன்), சாகிப் அல் ஹசன் (துணை கேப்டன்),
தமீம் இக்பால், முகமத் மிதுன், லிட்டன் தாஸ், முஸ்பிகுர் ரஹீம், ஆரிஃபுல் ஹக், மஹ்மதுல்லா, மொடசாக் ஹுசைன்,நஸ்முல் ஹுசைன், மெஹ்தி ஹசன், நஸ்முல் இஸ்லாம், ருபெல் ஹுசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான், அபு ஹைதர் ரோனி
Story first published: Saturday, September 1, 2018, 16:46 [IST]
Other articles published on Sep 1, 2018


Click it and Unblock the Notifications