டாடா பைபை.. சீனியரையே கழட்டி விட்ட ஷகிப்.. இளம் வீரர்கள் கொண்ட உலகக்கோப்பை அணி அறிவித்த வங்கதேசம்
தாகா : வங்கதேசம் நீண்ட இழுபறிக்கு பின்னர் உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது.
வங்கதேச அணியின் அனுபவ வீரரும், அதிக ரன்கள் குவித்த வீரரும் ஆன தமிம் இக்பால் அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். தமிம் இக்பால் நீக்கம் வங்கதேசத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், நான்கு இளம் வீரர்களுடன் அணியை அறிவித்துள்ளது வங்கதேசம்.

தமிம் இக்பால் சர்ச்சை : வங்கதேச அணியை நீண்ட காலமாக கேப்டனாக இருந்து வழிநடத்தி பல வீரர்களை வளர்த்து விட்டவர் தமிம் இக்பால். அவர் சில மாதங்கள் முன்பு ஓய்வை அறிவித்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அவருடன் பேசி மீண்டும் கிரிக்கெட் ஆட அவரை ஒப்புக் கொள்ள வைத்தார்.
மீண்டும் வலி : அந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்த தமிம் இக்பால், மீண்டும் கிரிக்கெட் ஆட ஒப்புக் கொண்டாலும் காயங்கள் காரணமாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் இரண்டு போட்டிகளில் ஆடிய பின் வலி காரணமாக மூன்றாவது போட்டியில் இருந்து விலகினார்.
ஷகிப் அல் ஹசன் திட்டவட்டம் : இப்படி காயத்தோடு இருக்கும் வீரரை கட்டாயமாக உலகக்கோப்பைக்கு என்னால் அழைத்து செல்ல முடியாது என தற்போதைய வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறி இருக்கிறார். அவரை எதிர்த்து முடிவு எடுக்க முடியாத நிலையில் வங்கதேச கிரிக்கெட் அமைப்பு தமிம் இக்பாலை நீக்கி உள்ளது.
வேகப் பந்துவீச்சாளர்கள் : தமிம் இல்லாத வங்கதேச அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் தான் அந்த அணியின் முக்கிய தூண்களாக பார்க்கப்படுகிறார்கள். டஸ்கின் அஹ்மத், ஷோரிபுல் இஸ்லாம், ஹாசன் மஹ்முத், முஸ்தாபிசூர் ரஹ்மான், டான்சின் அஹ்மத் ஆகியோர் உள்ளனர். சுழற் பந்துவீச்சுக்கு கேப்டன் ஷகிப் அல் ஹசன் உடன், நசும் அஹ்மத் இடம் பெற்றுள்ளார்.
4 உலகக்கோப்பை வென்ற வீரர்கள் : 2020 அண்டர் 19 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த ஹிரிதோய், ஷோரிபுல், டான்சி மற்றும் டான்ஸிம் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் வரிசைப்படி லிட்டன் தாஸ், டான்சிட் ஹாசன், நஜ்முல் ஹுசைன், ஷகிப் அல் ஹசன், டவுஹித் ஹிரிதோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, மஹேதி ஹாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
2023 உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணி : ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் (துணை கேப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிதோய், மெஹ்தி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷோரிபுல் இஸ்லாம், நசும் அகமது, மஹெதி ஹசன், மஹெதி ஹசன், தன்சிம் ஹசன், மஹ்முதுல்லா


Click it and Unblock the Notifications