For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்புக்கு மேல் தப்பு செய்யும் வங்கதேசத்து ஷபீர் ரஹ்மான்.. “இன்றைய குற்றம்” - பேஸ்புக் மிரட்டல்

By Aravinthan R

Recommended Video

ரசிகரை பேஸ்புக்கில் மிரட்டிய ஷபீர் ரஹ்மான்...வீடியோ

தாக்கா : பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ஷபீர் ரஹ்மான், சில நாள்கள் முன்பு பேஸ்புக்கில் இரண்டு ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஷபீர் ரஹ்மான் இது போன்ற தவறான காரியங்களில் இதற்கு முன்பும் சிக்கி தண்டனைகளும், தடையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் தகாத வார்த்தைகளும், மிரட்டலும் :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஜூன் 25ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின், இவரின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், ஒரு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர். அந்த பதிவை ஷபீர் ரஹ்மானுக்கு பகிர்ந்துள்ளார், அந்த ரசிகரின் நண்பர். இதனையடுத்து கோபம் கொண்ட ஷபீர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அல்லாமல், தாக்குதல் விடுப்பதாக மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அந்த இரண்டு நபர்களையும் பேஸ்புக்கில் பிளாக் (Block) செய்துள்ளார்.

bangladesh batsman shabbir rahman abused fans on social media


தொடங்கிய விசாரணை :

அவர் அனுப்பிய பதிவுகள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தேசிய வீரர்களுக்கு ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களில் எந்த அளவு கவனமாக இருக்க வேண்டும் என வழிமுறைகளை தாங்கள் காட்டி உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர். இந்த சம்பவத்துக்கு பின், ஷபீர் ரஹ்மானின் பேஸ்புக் கணக்கு என நம்பப்படும் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதில், 90,000 மக்கள் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

“குற்றங்கள் ஜாக்கிரதை” :

ஷபீர் ரஹ்மான் 2௦14ஆம், ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2016ஆம் வருடம், பிபிஎல் டி20 தொடரில். அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பெண் விருந்தினரை அழைத்து வந்த குற்றத்திற்காக அவரது ஒப்பந்தத் தொகையில் 30 சதவிகிதம் பிடிக்கப்பட்டது. டிசம்பர் 2017ஆம் ஆண்டு உள்ளூர் போட்டி நடந்த போது சிறுவனை தாக்கிய குற்றத்திற்காக, அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நடந்து முடிந்த பிபிஎல் தொடரில், நடுவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு நில்லாமல் சமீபத்தில், சக வீரர் மெஹ்தி ஹாசனோடு ஹோட்டல் அறையில் ஷபீர் சண்டையிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று இருக்கிறது. அந்த விவகாரத்தில் பங்களாதேஷ் கேப்டன் மஷ்ரபி மொர்டசா தலையிட்டு தண்டனையில் இருந்து ரஹ்மானை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
Story first published: Saturday, July 28, 2018, 21:00 [IST]
Other articles published on Jul 28, 2018
English summary
Bangladesh batsman Shabbir Rahman abused fans on social media, for criticising his current batting form.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+