Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலரை அசிங்கப்படுத்த.. "டான்ஸ்" ஆடிய வங்கதேச வீரர்.. சர்வதேச மேட்சில் - ஆக்ரோஷ "மோதல்"

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்கதேச வீரரின் செயல்பாட்டால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

வங்கதேச கிரிக்கெட் வீரர்களிடம் இல்லாத திறமையே கிடையாது. அவர்களது ஒரே மைனஸ் "வாய்" தான். போட்டியில் ஜெயிப்பதற்கு முன்பே கொண்டாடுவது, ஜெயிப்பது போல் இருந்தாலே எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, வார்த்தை மோதலில் ஈடுபடுவது, நாகினி டான்ஸ் போடுவது என்று தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

கடைசியில் ஜெயிக்க வேண்டிய மேட்சை தோற்றுவிட்டு, தேம்பி தேம்பி அழுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், எதிரணி வீரர்களை வம்பிழுப்பதை மட்டும் எப்போதும் நிறுத்த மாட்டார்கள்.

 பிடித்து கீழே தள்ளிவிடு

பிடித்து கீழே தள்ளிவிடு

கடந்த மே மாதத்தில் இலங்கையும், வங்கதேசமும் ஒருநாள் போட்டிகளில் மோதின. அப்போது, எதிரணி வீரர் ரன் எடுக்க கிரீஸை விட்டு வெளியே வருகிறார் என்பதற்காக, வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் அப்படியே பதிவானது.

காமெடி கிங்

அதற்கு பிறகு, உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், அம்பயர் மீதிருந்த கோபத்தில் ஸ்டெம்ப்புகளை பிடுங்கி வீசியெறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார் மற்றொரு சீனியர் வீரர் ஷகிப் அல் -ஹசன். இப்படி எங்கு பார்த்தாலும் சீனியர் வீரர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள் வரை பாரபட்சமின்றி காமெடி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இப்போது காமெடி கிங் ஆகியிருப்பவர் வங்கதேச பவுலர் டஸ்கின் அகமது.

 பரபரப்பு சம்பவம்

பரபரப்பு சம்பவம்

தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி, அங்கு ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 468 ரன்கள் குவித்தது. இதில், பவுலராக களமிறங்கிய டஸ்கின் அகமது 75 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜிம்பாப்வே வீரர் முசாராபாணியுடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 முட்டிக் கொள்ளும் அளவுக்கு

முட்டிக் கொள்ளும் அளவுக்கு

போட்டியின் போது, முசாராபாணி வீசிய பந்தை லீவ் செய்த டஸ்கின் அகமது, உடனே டான்ஸ் ஆடத் தொடங்கினார். இதனால், கடுப்பான முசாராபாணி நேரடியாக சென்று முறைக்க, பதிலுக்கு டஸ்கினும் முறைக்க, ஹெல்மெட்டால் முட்டிக் கொள்ளும் அளவுக்கு மோதல் சென்றுவிட்டது. பிறகு மற்ற வீரர்கள் வந்து விலக்க, இந்த காமெடி முடித்து வைக்கப்பட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல!

Story first published: Friday, July 9, 2021, 20:29 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+