Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை சூப்பர் 4.. ஆப்கன் மீண்டும் கடைசி ஓவரில் தோல்வி.. வங்கதேசம் போராடி வெற்றி

அபுதாபி : ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான இடத்தை பிடித்தது.

மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மோதின. இதில் தோற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் சந்தித்தன.

முன்னதாக, குரூப் சுற்றில் ஆப்கன், வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்த சூப்பர் 4 போட்டியில் ஆப்கன் மீண்டும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்போடு போட்டி துவங்கியது.

வங்கதேசம் முதல் பேட்டிங்

வங்கதேசம் முதல் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 6 ஓவருக்குள் இரண்டு விக்கெட்களை இழந்தது அந்த அணி. முக்கிய கட்டத்தில் இரண்டு ரன் அவுட்கள் செய்தது ஆப்கானிஸ்தான். ஒரு கட்டத்தில் அந்த அணி 87க்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்மதுல்லா, இம்ருல் கயீஸ் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

சரிவில் இருந்து மீண்ட வங்கதேசம்

சரிவில் இருந்து மீண்ட வங்கதேசம்

ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. 87-5 என தவித்து வந்த வங்கதேச அணியை இருவரும் மீட்டனர். முதலில் நிதானமாக ஆடிய இருவரும், கடைசி சில ஓவர்களில் அடித்து ஆடினர். இறுதியில் வங்கதேசம் 249 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தன் 50 ஓவர்களை முடித்துக் கொண்டது.

பொறுமையாக ரன் சேர்த்த ஆப்கன்

பொறுமையாக ரன் சேர்த்த ஆப்கன்

250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கன் அணியின் இஹ்சனுல்லா 8, ரஹ்மத் ஷா 1 ரன்களுக்கு துவக்கத்தில் வெளியேறினர். இதனால், அடுத்து ஜோடி சேர்ந்த துவக்க வீரர் ஷாசாத் மற்றும் ஷாஹிதி மிக மிக பொறுமையாக ஆடினர். விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தினர். அரைசதம் அடித்து ஆடி வந்த ஷாசாத் 53 ரன்களுக்கு . 25வது ஓவரில் வெளியேறினார்.

ஆப்கன் போராட்டம் வீண்

ஆப்கன் போராட்டம் வீண்

அடுத்து ஆப்கன் அணி கடுமையாக போராடியது. ஒவ்வொரு வீரரும் விக்கெட்டும் விழாமல், அதிகரித்து வரும் பந்து, ரன் வித்தியாசத்தையும் குறைக்க கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். இடையே சாஹிதி 71, அஸ்கார் ஆப்கன் 39, முஹம்மது நபி 38 ரன்களுக்கு வெளியேறினர். கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆப்கன் அணி 48வது ஓவரில் 12 ரன்கள், 49வது ஓவரில் 11 ரன்கள் அடித்தது. எனினும், கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கன். 3 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது வங்கதேசம்.

ஆப்கன் அடுத்தடுத்து கடைசி ஓவர்கள் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், ஆப்கன் அணி என்றால் இனி எளிதாக நினைக்க முடியாது என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.

Story first published: Monday, September 24, 2018, 10:10 [IST]
Other articles published on Sep 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+